Tuesday, June 18, 2024

ஆஷ்யை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற தினம்

 🍁☘️

1911 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் சென்னை ராஜதானியையே அதிர செய்தது,


🔥வரலாற்றில் இது ஒன்று தான் இங்கிலாந்து அரசை எதிர்த்த முதல் கொலை..... மற்றும் கடைசி கொலை.


ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ் என்பது முழு பெயர். டப்ளின் உயர்நிலை ப

ள்ளியில் படித்து பின்னர் 1892 ஆம் ஆண்டு ட்ரிடின்டி டப்ளினில் பட்டமேற்படிப்பு முடிக்கிறார். ICS படித்து தேறியவர் இந்தியாவில் உள்ள ஒரிசா மாநிலத்தில் முதல் பணி. இங்கிருந்து சென்னைக்கு சிறப்பு அலுவலராக பணி மாற்றம்.


அங்கிருந்து வட ஆற்காடு மாவட்டம் என்றழைக்கப்பட்ட இன்றைய வேலூரில் துணை கலெக்டர் பதவி. இங்கு வைத்து பல மன மாற்றங்களை

சந்திக்கிறார் ஆஷ் என்கிறது சரித்திரம். ராபர்ட் கிளைவ் காலத்தில் ஏற்பட்ட புரட்சிக்கு பின்னாலான காரணங்களை ஆராய்கிறார்..... அங்கு உள்ள கோட்டை கொத்தளங்களை பார்வையிடுகிறார். கோட்டையின் எதிரே உள்ள உயிர்த்தியாகம் - ??? (இன்றைய CSI சர்ச் அமைந்துள்ள இடம்..) செய்தவர்களின் கல்லறையை பராமரிக்க ஏற்பாடுகள் செய்கிறார்.


தொப்பி மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு தடவிய துப்பாக்கி தோட்டாக்கள் பற்றியும் தெரிந்து கொள்கிறார்...... உணவு உண்ணும் வழக்கம் மற்றும் அதற்கான வெவ்வேறான இடங்கள் இருப்பது பற்றி எல்லாம் கேள்வி படுகிறார். தெரிந்து கொள்கிறார்.இது மிகப்பெரிய அளவில் அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் வேலூரில் இருந்த காலத்தில் தான் வேலூர் சிப்பாய் புரட்சியின் நூற்றாண்டு விழா நடக்கின்றன..... (((( இதன் பின்னர் திரு கருணாநிதி தலைமையில் தமிழக அரசு அமைந்த சமயத்தில் இருநூறாம் ஆண்டு விழா நடத்தப்பட்டு மக்கான் சந்திப்பில் கிரானைட் கற்களால் ஆன ஸ்தூபி நடப்பட்டது)))))))


1910 ஆம் ஆண்டு ஆஷை திருநெல்வேலி மாவட்டத்தின் கலெக்டராக பணி உயர்வு கொடுத்து அங்கு அனுப்பப்படுகிறார்.


இங்கு பொறுப்பேற்றுக்கொண்டதும் தாம் வேலூரில் பெற்ற அனுபவங்களை கொண்டு திருநெல்வேலியில் தம் பணியாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து உணவு உண்ண வேண்டும் என்று உத்தரவு கொடுக்கிறார். இது அங்கு பலத்த சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. இது போதாதென்று ஒரே குவளையில் அனைவருமே தண்ணீர் அருந்த வேண்டும் என்றே சொல்லிவிடுகிறார். 


இது மேலும் அங்குள்ளவர்களை தூண்டும் வகையில் அமைந்துவிடுகிறது.


💢இஃது செங்கோட்டை உள்ள சங்கர ஐயர் என்பவரின் தன்மானத்தை தூண்டி விடுகிறது. ஏன்????

❓ஜாதி துவேஷமா.....????? 

யார் இந்த சங்கரன்....,


1886 ஆம் ஆண்டு ரகுபதி ஐயருக்கு மகனாக பிறந்தவர் தான் இந்த சங்கரன். செங்கோட்டையில் பள்ளி படிப்பை முடித்தவர்., திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திருநாள் மகாராஜா கல்லூரியில் சேர்ந்து பிஏ பட்டமும் பெற்றார்.பின்னர் சீதாராமய்யரின் மகளான பொன்னம்மாளை மணம் முடிக்கிறார். திருவனந்தபுரம் புனலூர் வனப்பகுதியில் வனக் காவலராக பணியமர்த்த படுகிறார். இவருக்கு நட்பு வட்டாரம் மிகப் பெரியது.


அனைவரிடமும் சமமாக.. வாஞ்சையுடன் பழகக்கூடியவர், ஆதலால் #வாஞ்சிநாதன் என்கிற பெயரில் அழைக்கப்பட்டு இருக்கிறார். காரணம் சங்கரா என அழைக்கக்கூடிய வேறு ஒருவரும் அவர்களுடன் அப்போது இருந்திருக்கிறார் என்கிறார்கள். 


வேலைக்காக வனப்பகுதி ஓரங்களில் வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆட்களை தங்க வைக்க படுகிறார்கள். ஆரம்ப நாட்களில் இது பெரியதாக கவனத்தை கவராத இது.,... பின்னாளில் ஈர்த்தது. இந்த சமயத்தில் தான் கலெக்டர் ஆஷ் உத்தரவு வருகிறது...... அங்கு இருப்பவர்கள் வேண்டும் என்றே தங்களுடன் சேர்ந்து உணவு உண்ணவேண்டும்,... இறைச்சி உண்ணவேண்டும் என்று கொக்கரிக்கிறார்கள்.


இது உள்ளூர் வாசிகளுக்கு பெரும் தொந்தரவாக முடிகிறது. பணியில் இருந்த வாஞ்சிநாதனிடம் இது பற்றி கேள்வி கேட்க படுகிறது. இதில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு தன் மேலிடத்துக்கு கேள்வி கேட்டு செய்தி அனுப்புகிறார். வழக்கம் போல ஊமையாக இருக்கிறார்கள் அங்கிருந்தவர்கள்.


சரி யார் இந்த வெளியாட்கள்.... ஏன் அங்கு தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பார்த்தால்... கேரளா மாநிலத்தில் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான மரங்களை வெட்டி எடுத்துப் போக வந்த பணியாளர்கள் என்பது தெரிய வருகிறது. அதனை நேரிடையாக செய்யாமல் வேறோர் காரணங்களுக்கு திசை திருப்ப கலெக்டரின் உணவு விஷயத்தின் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு அழிச்சாட்டியம் செய்து கவனத்தை அதில் திருப்பி இருக்கிறார்கள் என்பது புரிந்தது.


இந்த மரங்கள் தான் பின்னாளில் இங்கிலாந்து அரசு சூரியன் அஸ்தமிக்காத தேசம் என்று சொல்லிக் கொள்ள காரணமாக இருந்த கப்பல்களை கட்ட பயன்பட்டது என்கிறது சரித்திரம். நம் மேற்கு தொடர்ச்சி மலையின் மரங்கள் இல்லை என்றால் இங்கிலாந்து கடற்படையே கிடையாது என்பது நம்மில் பலருக்கு இன்றுவரை தெரியாத பரம ரகசியம்.


இதெல்லாம் வாஞ்சிநாதனை உசுப்பி விடுகிறது. நேரிடையாக தாமே களத்தில் இறங்குவதாக தீர்மானம் செய்கிறார். அந்த ஒரு வாரத்தில் குடும்பத்தாருடன் மிக ஒட்டுதலாக இருக்கிறார். அரசினை நேரிடையாக எதிர்க்கப்போகும் தாம், தம் காலத்திற்கு பின்னான வாழ்க்கைக்கு என சில பல முன்னேற்பாடுகளை செய்ய முடியுமா என முயன்று பார்க்கிறார். நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்கிறார். பிறகு தனது நண்பனான சங்கர ராமன் என்பவரை அழைத்து கொண்டு, கொடைக்கானலுக்கு தன் குடும்பத்தினரை சந்திக்க செல்லும் சேதி அறிந்து கலெக்டர் ஆஷ்யை சுட்டுக் கொல்ல மணியாச்சி ரயில் நிலையம் வருகின்றார்.


அது 1911 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17 ஆம் தேதி காலை 10:20 மணி அளவில் இவர்கள் வந்து காத்திருக்க , ரயில் நிலையத்திற்கு வண்டி 10:38 தான் வருகிறது. அந்த பதினைந்து நிமிடங்கள் சலனமேயில்லாமல் உலக விஷயங்களை சிரித்து பேசிக் கொண்டு இருந்தார்கள் அவர்கள் என்கிறார்கள் நேரில் பார்த்த சாட்சிகள். முதல் வகுப்பு பெட்டி வந்ததும் மிடுக்குடன் பச்சை நிற கோட்டு அணிந்து காதில் கடுக்கன் மின்ன கம்பீரமாக நடந்து செல்கிறார் வாஞ்சிநாதன் உட்பட அவர்கள் இருவரும். வண்டியில் ஏறியதும் அரக்க பறக்க ஒவ்வொருவரையாக தேடுகிறார்கள். 

ஆஷ்யை கண்டுபிடிக்கிறார்கள்.

வாஞ்சிநாதன் தாம் கையோடு கொண்டு வந்திருந்த பெல்ஜியம் மேக் தானியங்கி துப்பாக்கி எடுத்து ஆஷ்யை குறிப்பார்த்து சுட்டுக்கொல்கிறார். உடனே தன்னையும் சுட்டுக்கொள்கிறார்.


உடன் வந்திருந்த சங்கர ராமன் தப்பிச் செல்கிறார். ஆனால் பின்னாளில் பிடிக்க பட்டு கொல்லப்பட்டார் என்பது வேறு விஷயம்.


குண்டடி பட்ட கலெக்டரை காப்பாற்ற அந்த ரயில் வண்டி மீண்டும் திருநெல்வேலிக்கே திரும்புகிறது. ஆனால் வண்டி திருநெல்வேலி நெருங்கும் சமயத்தில் உயிர் பிரிந்து விடுகிறது. இறக்கும் போது அவரது வயது 39 மட்டுமே.


பாளையங்கோட்டை மிலிட்டரி லைனில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இது வேலூர் கோட்டைக்கு எதிரில் உள்ள கல்லறைகளை ஒத்த வடிவத்தில் இருக்குமாறு பின்னாளில் கட்டப்பட்டதை எதேச்சையாக கண்டுபிடிக்கிறார்கள். காரணம் அவர் முன்னர் வேலூரில் பணியில் இருந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவரிடம் இருந்திருந்தன.. சில ஆவண கோப்புகளாக..... ஏன் எதற்காக எடுத்து வைத்தார் என்பதெல்லாம் பின்னர் தான் தெரியவந்தது. தான் இங்கிலாந்து திரும்பிய உடன் வேலூர் கோட்டை எதிரே உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற குறிப்புகள் அதில் கண்டெடுக்கப்பட்டது.


ஆனால் தம் கல்லறைக்கே அவை மாதிரி வடிவமாக போகின்றன என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை.


⭕சங்கர ஐயர் என்கிற இயற்பெயர் கொண்ட வாஞ்சிநாதன் சட்டை பையில் பிரேத பரிசோதனையின் போது ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டது. ஆங்கிலேய சத்ருக்கள் என்று ஆரம்பித்து....... அவர்கள் எவ்வாறு எல்லாம் தம் தேசத்தை நாசம் செய்கிறார்கள் என்பதை நுட்பமாக விவரித்து...... அவர்களை துரத்தி நாட்டினை சுத்தம் செய்ய தம்மால் இயன்ற பணியினை என் தாய் திருநாட்டிற்கு செய்யும் ஒரு சந்தர்ப்பம் இது விவரித்து இருந்தார்.


அந்த கடிதத்தில் உள்ள தகவல்களை அன்றைய அரசு மறைத்தது..... ஆனாலும் விஷயங்கள் கசிந்தன....... இன்று அது ஆவணங்களாகவே காணக்கிடைக்கின்றன. அவரின் கைப்பட எழுதிய அந்த கடிதத்தில் நிறுத்தி நிதானமாக ஒரு கோர்வையாக விவரித்து இருப்பதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.


பசும் பொன் முத்துராமலிங்க தேவர் மூலமாக பின்னாளில் நேதாஜி என்று அன்போடு அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸிடம் தகவல்களாக இது சொல்லப்பட்டு இருக்கிறது என்கிறார்கள். இது உண்மை என்கிறார் போல மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சன்னதி தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்கட்டில் குடியிருந்த வாஞ்சிநாதன் மனைவி பொன்னம்மாளை தேவர் வந்து பார்த்து அவரது காலில் விழுந்து வணங்கி சிறிய பண முடிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அது நாள் அவரை தெரியாதவர்கள் கூட இந்த சம்பவத்தால் பலருக்கும் தெரிய வந்தது. தன் தாய் என்றே அங்குள்ள மக்களுக்கு அவர் அறிமுகம் செய்து இருக்கிறார் பசும் பொன் முத்துராமலிங்க தேவர்.


இவருக்கு பின்னாளில் அந்த பகுதியில் #தேவரம்மா என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது.


ஒரு தேசபக்தி கொண்டு மனிதன் தன் தேசத்தை எப்படி நேசித்தார் என்பதை வெளிப்படுத்திய மனிதனை சமீபகாலமாக அந்த பகுதியில் எவ்வாறு உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் பாருங்கள்.....


ஆனால் இன்று...,

சனாதனத்தை வேரறுத்த ஆஷ்துரையை ஆதிக்க சாதி எண்ணம் கொண்ட பிராமணன் வாஞ்சிநாதன் அநியாயமாக படுகொலை செய்தான் என்கிறார்கள்...

போதாக்குறைக்கு,

கலெக்டர் ஆஷ் சமாதியில் அஞ்சலி செலுத்தும் வகையில் சில தற்குறிகள் பதாகைகள் வைத்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் இந்துத்துவா எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு ஊடகங்களும் வெண்சாமரம் வீசிக் கொண்டு இருக்கிறார்கள்....


ஆஷ் யின் வாரிசுகள் கூட இதனை.., இந்த செயலை கண்டித்து இருக்கிறார்கள் என்பது தான் இதில் உள்ள நகைமுரண். 

அவர்கள் சொன்னது ஆரம்ப நாட்களில் தாங்களும்... இந்தியர்கள் மீது அளவுகடந்த கோபம் கொண்டு வளர்ந்து வந்ததாகவும்.... பின்னாளில் இதன் உண்மை தன்மையை அறிந்து கொண்ட போது தான்....... ஒருவேளை வாஞ்சிநாதன் எழுதிய கடிதங்களை துறை ரீதியாக கலெக்டரின் பார்வைக்கு கொண்டு வந்து இருந்தால் தன் தாத்தாவுக்கு வேறு மாதிரியாக புரிதல் ஏற்பட்டு இருக்கும் என்கிறார்கள். சமீபத்தில்...... அதாவது 2016-17  ஆம் ஆண்டு காலகட்டத்தில் அவர்கள் ஆஷ் கல்லறைக்கு வந்து போனதாக குறிப்புகள் உள்ளன.


நாம் நம் வரலாற்றை சரியாக தெரிந்துக்கொள்ள வில்லை...... அல்லது தெரிந்து கொள்ளாவண்ணம் கட்டமைக்கப்பட்டிருக்கிறோம்  என்பதற்கு இவையெல்லாம் தான் சாட்சி. இது தான் நிதர்சனமான உண்மையும் கூட. இல்லை என்றால் வாஞ்சிநாதனை....... அவரின் செயலை....... மனம் போன போக்கில் இங்குள்ள சில குயுக்தவாதிகள் கீழ்த்தரமாக....இன்றைய தேசவிரோத செயலாக மத துவேஷம் கொண்டதாக மாற்றியிருக்க முடியுமா...... எத்துணை அயோக்கியத்தனம் இது.... 


கயமைத்தனம் கொண்ட க.மிஷனரிகளின் இந்த செயலால் கிருஸ்துவத்தின் மீதான வெறுப்பு மட்டுமே வரும் நாட்களில் எஞ்சியிருக்க போகிறது.


இந்த நாளில்

இந்த சமயத்தில்.....

தேசத்தின் மீதான அர்ப்பணிப்பு, மற்றும் அதன் வளங்களின் மீதான ஆழமான அவதானிப்பு கொண்ட ஒருவரின் ஆத்மார்த்தமான பாவனையை நினைவு கூற நாம் அனைவருமே என்றென்றும் கடமை பட்டிருக்கிறோம். அவருடைய செயலின் உள்ளார்ந்த அர்த்தத்திற்கு கடன் பட்டுயிருக்கிறோம்.


💞 இந்த தேசத்தினை கண்ணின் இமை போல காப்போம். வெற்றி பெறுவோம்.


வாழ்க பாரதம் 💕.


💓 ஜெய் ஹிந்த்.

No comments:

Post a Comment