Tuesday, June 18, 2024

உள்ளி தீயல் குழம்பு

 **

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் -  200 கிராம்

தேங்காய் துருவல்  - ஒரு மூடி 

வர கொத்தமல்லி - 3  ஸ்பூன்

காய்ந்த மிளகாய்  - 8 

மிளகு  - கால் ஸ்பூன் 

வெந்தயம்  - கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள்  - அரை ஸ்பூன் 

மஞ்சள்தூள் -  அரை ஸ்பூன்

புளி  - எலுமிச்சை அள

வு

கடுகு  - அரை ஸ்பூன்

தேங்காய் எண்ணெய்  - 5 ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிதளவு




புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.


கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிளகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், வர கொத்தமல்லி, இவை அனைத்தையும் ஒரு நிமிடம் வதக்கவும்.


பின்பு அதனுடன்  5   சின்னவெங்காயம், தேங்காய் துருவல், கருவேப்பிலை சேர்த்து அடுப்பை  மிதமான தீயில் வைத்து நன்கு கலர் மாறும் வரை வறுக்கவும்.


அனைத்து பொருட்களையும் நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும், குறைந்த தீயில் 15 நிமிடமாவது தொடர்ந்து வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.


அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும் .


கடாயை அடுப்பில் வைத்து மீதமுள்ள தேங்காய் எண்ணெயை ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள்,  சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.


வெங்காயம் நன்கு வதங்கி கலர் மாறியவுடன் அதனுடன் புளித்தண்ணீர் , அரைத்த மசாலா விழுது ,  குழம்பிற்கு தேவையான அளவுக்கு உப்பு, இரண்டு டம்ளர் தண்ணீர்  சேர்த்து  நன்கு கொதிக்க விட்டு குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலே மிதந்து வந்தவுடன் இறக்கினால் மிகவும் சுவையான உள்ளி தீயல் ரெடி.

No comments:

Post a Comment