Sunday, June 30, 2024

உலக சமூக ஊடக தினம்.

இன்றைய நாள்.

(30-ஜூன்)

**

🌟 ஒவ்வொரு ஆண்டும் உலக சமூக ஊடக தினம் ஜூன் 30ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

🌟 மக்கள் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சமூக ஊடகங்களை பெருமைப்படுத்தும் விதமாக உலக சமூக ஊடக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

🌟 சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கவும், சமூகங்களைக் கட்டியெழுப்பவும், சமூக ஊடகங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது

ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

*முக்கிய நிகழ்வுகள்..*.

👉 1948ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் மறைந்தார்.


👉 1917ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவரான தாதாபாய் நௌரோஜி மறைந்தார்.


📞 1937ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி உலகின் முதலாவது அவசரத் தொலைப்பேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.


👉 1919ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சான் வில்லியம் ஸ்ட்ரட் மறைந்தார்.


👉 1972ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி (leap second) அதிகரிக்கப்பட்டது.


👉 ஒவ்வொரு ஆண்டும் உலக சிறுகோள் தினம் ஜூன் 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சிறுகோள் தாக்குதலின் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

No comments:

Post a Comment