Sunday, June 30, 2024

நெல்லிக்காய் - தினம் ஒரு மூலிகை

 *


*நெல்லிக்காய்* மிகவும் சிறிய இலைகளையும் இளம் மஞ்சள் நிற காய்களையும் உடைய மரம் காய் இனிப்பு புளிப்பு துவர்ப்பு சுவைகளை ஒருங்கே கொண்டது நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த காய் எல்லா காலங்களிலும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலை வேர் காய் வற்றல் ஆகியவை மருத்துவ பயன் உடையது இது ஒரு கற்ப மருந்து காய் வெப்பு அகற்றி சிறுநீர் பெருக்கி மலமிளக்கி உடல் வாய்வு அகற்றும் வேர் சதை நரம்புகளை சுருங்கச் செய்யும் நெல்லிவற்றல் குளிர்ச்சி உண்டாக்கி உடல் தாதுக்களை பலப்படுத்தும் இருபத்தி ஐந்து கிராம் நெல்லி கொழுந்தை மென்மையாய் அரைத்து மோரில் கலக்கி இரு வேலை கொடுத்து வர சீதபேதி தீரும் நெல்லிக்காய் சாறு 15 மில்லி தேன் 15 மில்லி எலுமிச்சை சாறு 15 மில்லி கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும் நெல்லிக்காய் சாறு பொன்னாங்கண்ணி சாறு பால் வகைக்கு அரை லிட்டர் செவ் இளநீர் 2 லிட்டர் நல்லெண்ணெய் ஒன்னரை லிட்டர் கலந்து அதிமதுரம் ஏலம் பூலாங்கிழங்கு கஸ்தூரி மஞ்சள் ஜாதிக்காய் ஜாதிப்பத்திரி திரிகடுகு தான்றிக்காய் கடுக்காய் வகைக்கு 15 கிராம் தூள் செய்து கலந்து பதமுற காய்ச்சி தொடர்ச்சி நாளை....

No comments:

Post a Comment