Monday, June 17, 2024

நம்மை நம்புவோம் - இன்றைய சிந்தனை

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

நம்மைப்பற்றி நாமே தாழ்வாக நினைப்பது, நமது திறமைகளை வீணடித்து விடும். நம்மைப் பற்றி நாம் எப்பொழுதும் உயர்வாகவே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும்..*


அப்போதுதான் நாம் எடுத்த செயலை வெற்றி யடைய வைக்க முடியும் பல முன்னேற்றங்களைப் பெறலாம். அதற்கு முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும்.*


அது நமக்கு மாபெரும் வெற்றிகள் கிடைப்பதோடு, ந

மது எதிரிகள் கூட நம்மை வாழ்த்துவதற்கு முன் வருவார்கள்.*


இந்த எண்ணம்தான் நம்மை உயர்த்திக் கொண்டே போகும்! உயர உயரப் பறந்து செல்லும் பறவையைப் போல, நாமும் வாழ்க்கை என்ற வான் வெளியில் உயர்ந்து கொண்டே செல்லலாம்..*


மாவீரன் நெப்போலியனுக்கு, அவனுடைய தளபதிகள் விருந்து கொடுத்தார்கள். பழரசக் கோப்பைகளைத் தட்டி இசைஎழுப்பி,  ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைச் சொல்லிகொண்டு இருந்தார்கள்.*


இது முடிந்ததும் நெப்போலியனுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் குண்டு வெடிக்க வேண்டும்.* *இந்த ஏற்பாடுகளைத் தளபதிகள் செய்து இருந்தார்கள்.*

*நெப்போலியனுக்கு இந்த விபரம் தெரியாது.*


அனைவரும் வாழ்த்துக்களைப் பரிமாறிய பின்பு, குண்டு வெடித்தது  தளபதிகளின் கைகளிலில் இருந்த பழரசக் கிண்ணங்கள் அதிர்ச்சியில் கீழே விழுந்து நொறுங்கி விட்டன.*


ஆனால் நெப்போலியன் கை மட்டும் சிறிதும் நடுங்க வில்லை. அவன் கையில் இருந்த கிண்ணத்தில் பழரசம் கூடத் ததும்பவில்லை.*


இதைப் பார்த்த தளபதிகள் நெப்போலியனிடம் கேட்டார்கள்.*


“பிரபுவே! இது நாங்கள் செய்த ஏற்பாடுதான்! இருந்தும் கூட நாங்கள் ஏமாந்து பழரசக் கிண்ணங்களைத் தவற விட்டு விட்டோம்.*


ஆனால் உங்களுடைய கை கொஞ்சம் கூட நடுங்கவில்லை. எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள்!” என்று பாராட்டினார்கள்.*


உடனே நெப்போலியன் சொன்னான். “அதனால்தான் நான் சக்கரவர்த்தியாக இருக்கிறேன். நீங்கள் தளபதியாக இருக்கின்றீர்கள்” என்றான்.*


உண்மைதான்! நெப்போலியன் தன் மீது மிகுந்த நம்பிக்கையும், மன உறுதியும்  கொண்டு இருந்தார்..*


அத்துடன் எதிலும் ஏமாந்து போகாத விழிப்புணர்வு அதிகமாக இருந்தது.*


நெப்போலியனின் மாபெரும் வெற்றிகளுக்கு இவைகள்தான் காரணம்!ஒவ்வொரு கணமும் நெப்போலியன் தன்னை மிகவும் நம்பினான்.



*ஆம்.,தோழர்களே..*


*🏵️தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புதலாகும், கடின உழைப்பு, விடா முயற்சி, திட்டமிடல் என்றெல்லாம் சொல்லுகிறோம் இவைகள் எல்லாம் சும்மா வெறுமனே பின் பற்ற முடியாது,*


*⚽தன்னம்பிக்கை இருந்தால்தான் அவைகள் எல்லாம் கை கூடும்.எனவே எல்லாவற்றுக்கும் அடிப்படை  தன்னை நம்புவது ஆகும்..நம்புங்கள் நம்மால் முடியும்!✍🏼🌹*

No comments:

Post a Comment