Saturday, June 29, 2024

நுணா அல்லது மஞ்சனத்தி - தினம் ஒரு மூலிகை


எதிரடிக்கில் அமைந்த இலைகளும் வெண்ணிற சிறிய மலர்களையும் முடிச்சு முடிச்சான காய்களையும் கரு நிற பழங்களையும் மரத்தின் உட்புறம் மஞ்சள் வண்ணமாய் இருக்கும் மஞ்சனத்தி என்றும் அழைக்கப்படும் தளிர் இலை காய் பட்டை வேர் மருத்துவ பயன் உடையது கடைகளில் விற்கப்படும் நோனி என்ற சர்பத் நுணா பழத்தில் இருந்து தயார் செய்யப்படுகிறது இவை காலரா டைப் ஆய்டு காமாலை தைராய்டு உடல் பருமன் இதய நோய் புற்றுநோய் போன்றவற்றை குணமாக்குவதாக ஆய்வுகள் மூலம் கூறப்படுகிறது இலையை அரைத்து பற்று போட புண் சிரங்கு ஆறும் நுணா இலைச்சாறு ஒரு பங்கும் உத்தாமணி நொச்சி பொடுதலை ஆகியவற்றின் சாரும் ஒரு பங்கு கலந்து மூன்று அல்லது நான்கு வேலை கொடுத்து வர சகலவிதமான மாந்தமும் தீரும் நுணா காயையும் உப்பையும் சமன் அரைத்து அடைத்தட்டி உலர வைத்து புடமிட்டு அரைத்து பற்படியாக பயன்படுத்த சுகபேதியாகும் கெடுதல் இல்லாமல் மலச்சிக்கலும் தீரும் இளைச்சாற்றை மூட்டுகளில் பூசினால் மூட்டு வீக்கம் மூட்டு வலி மூட்டு வாதம் குணமாகும் மரப்பட்டையை தைலம் காய்ச்சி குன்மம் கயலை முதலியவற்றை குணமாகும் பட்டை தோல் பதனிட பயன்படுகிறது நன்றி

No comments:

Post a Comment