Thursday, June 13, 2024

துளசி - தினம் ஒரு மூலிகை


* *துளசி*  இதில் பலவகை உண்டு. வெண்துளசி ஸ்ரீ துளசி ராம் துளசி கருந்துளசி நல் துளசி கல் துளசி முள் துளசி காட்டு துளசி நாய் துளசி ஆகும் இவை கோயில்களில் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பூந்தோட்டமாக அமைப்பது உண்டு துளசி சாறு சளி தொல்லை ஆஸ்துமா ஜீரண சக்தி மேம்படுத்தவும் இருதயம் சீராக இயங்குவதற்கும் மன இறுக்கம் நரம்புக் கோளாறு ஞாபக சக்தி இன்மை ஆஸ்துமா இருமல் தொண்டை நோய்களை குணமாக்கும் சக்தி உண்டு இலை 20 தோல் நீக்கிய இஞ்சி இரண்டு கிராம் சிதைத்து 200 மில்லி நீரில் இட்டு 100 மில்லியாக காய்ச்சி தினம் மூன்று வேளை ஒரு முடக்கு வீதம் குடித்து வர நீடித்த சீதள காய்ச்சல் மூன்று நாட்களில் தீரும் அரை பிடி இலையை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு இருநூறு மில்லியாக காய்ச்சி வடிகட்டி 15 கிராம் கற்கண்டு கலந்து இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து தினம் 4 வேளை ஒரு முடக்கு வீதம் குடிக்க மார்பு நோய் காச நோய் காய்ச்சல் ஆகியவை குணமாகும் துளசி இலை 50 கிராம் மிளகு 20 கிராம் மையாய் அரைத்து குண்டுமணி அளவு மாத்திரையாக்கி காலை மாலை வெந்நீரில் குழைத்து கொடுக்க சகலவித காய்ச்சலும் தீரும் தொடர்ச்சி நாளை

No comments:

Post a Comment