Wednesday, June 19, 2024

செய்தித் துளிகள் - 19.06.2024(புதன்கிழமை)

🍒🍒முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் சேர்த்து வழங்க ரூ.4.27 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

🍒🍒டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எனப்படும் விடைக் குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்

ளது.

இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் ஜூன் 25ஆம் தேதி வரை ஆன்லைனில் ஆட்சேபிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

🍒🍒அரசு பள்ளிகளில் ஜாதி அடையாளங்களை உடனடியாக நீக்க நீதிபதி சந்துரு குழு பரிந்துரை செய்துள்ளது.

கள்ளர் பள்ளி, ஆதிதிராவிடர் நலத்துறை என்பது உள்பட ஜாதி அடையாளங்கள் பள்ளிகளின் பெயர்களில் இருக்கக்கூடாது. பள்ளிகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களில் குறிப்பிடும் போதும் ஜாதி அடையாளங்கள் கூடாது. ஜாதிய அடையாளங்கள் இருக்காது என்ற உறுதிமொழியை பெற்ற பிறகே புதிய பள்ளி தொடங்க அனுமதி தர வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு வைக்கப்பட்டுள்ள ஜாதி பெயர்களை நீக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

🍒🍒3 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த மாணவருக்கு கிடைத்த அங்கீகாரம்.

👉3 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த National Institute of Design கல்லூரி மாணவர் ரா.செ.சபரிஷ் 2024ம் ஆண்டுக்கான Design Student Award வென்றுள்ளார்!

திருச்சியைச் சேர்ந்த இவர் விஜயவாடாவில் உள்ள கல்லூரியில் படித்துவந்தபோது, திடீர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவர் வடிவமைத்த மின் பணியாளர்களுக்கான பாதுகாப்பு கருவி விருதை வென்றுள்ளது

🍒🍒மாதவிடாய் சுகாதார திட்டம்' மூலம் ஆண்டுக்கு 43 லட்சம் பள்ளி மாணவிகள் பயன்பெறுவதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தகவல்!

பள்ளிக் குழந்தைகள், மருத்துவ மனை உட்புற நோயாளிகள், பிரசவ தாய்மார்கள் என ஆண்டுக்கு 1.2 கோடி சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுவதாகவும் அதற்காக ₹115 கோடி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒நீட் தேர்வில் தவறு இருந்தால் மத்திய அரசும் தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும் - உச்சநீதிமன்றம்.

👉தேர்வுக்கு தயாராகும் குழந்தைகளின் உழைப்பை நாம் மறக்கக் கூடாது.

👉நீட் தேர்வு விவகாரத்தில் 0.001  சதவிகிதம் யாராவது அலட்சியமாக இருந்தாலும், அது முழுமையாக ஆராயப்பட வேண்டும்.

👉ஒரு தனிநபர் ஒட்டு மொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறி இருக்கக்கூடிய சூழலை யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது.

👉நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை 2 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

🍒🍒முன்னுரிமையின் படி 43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

🍒🍒செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர யுஜிசி உத்தரவு

🍒🍒அரசுப் பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களுக்கான பணிகளை பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநரகம் வரையறை செய்துள்ளது.

🍒🍒EMIS - பெற்றோர் மொபைல் எண் சரிபார்ப்பு - அதிர்ச்சி ரிப்போர்ட்.

ஒரே தொலைபேசி எண்ணில் 1240 மாணவர்களுக்கு சரி பார்ப்பு செய்யப்பட்டுள்ளது.

🍒🍒9 முதல் 12-ம் வகுப்பு வரை உயர் கல்வி வழிகாட்டி பாடவேளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

🍒🍒அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டி கையேட்டை பள்ளிக் கல்வித் துறை வடிவமைத்துள்ளது.

👉நூலக பாடவேளையில் வாசிப்பு இயக்க புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக வாசிக்கிறார்களா ? என்பது கண்காணிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவு.

🍒🍒உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: முதல் 10 இடங்களுக்கான பரிந்துரையில் 5 இந்தியப் பள்ளிகள்

🍒🍒அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பொறுப்பு

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமனம்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

🍒🍒வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவெண்ணுக்கு மாற்ற தமிழக அரசு போதிய அவகாசம் கொடுத்தாலும், சில பிரச்சனைகள் உள்ளதால் மேலும் அவகாசம் தேவைப்படுகிறது. நாங்கள் பேருந்துகளை வாங்கும்போது வரி எதுவும் விதிக்கப்படவில்லை. வரி ஏய்ப்பு செய்யவில்லை.

-ஆம்னி பேருந்துகள் சங்கம்

🍒🍒ஜூன் 22ம் தேதி கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்  

☂ தேனி

☂ திண்டுக்கல்

☂ திருப்பூர்

☂ கோவை 

☂ நீலகிரி 

சென்னை வானிலை ஆய்வு மையம்

🍒🍒இந்தியாவில் Gemini AI சாட்பாட் செயலியை கூகுல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதை தமிழ் உட்பட 9 மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம். தற்போது இந்த செயலியை ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துவோர் பிளே ஸ்டோர் மூலம் பதிவிரக்கம் செய்துக்கொள்ளலாம்.

🍒🍒தமிழகத்தில் மினிபஸ்கள் மீண்டும் இயக்கப்படுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அதிகபட்சமாக 25 கி.மீ தூரம்வரை பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படவுள்ளது.

🍒🍒மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி வரும் ஜூன் 30-ம் தேதி முதல் மீண்டும் தொடங்குவதாக பிரதமர் மோடி அறிவிப்பு

🍒🍒தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை SC பட்டியலில் இருந்து நீக்கி, OBC பட்டியலில் சேர்க்க கோரி பிரதமர் மோடிக்கு தேவேந்திர சேனா அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

🍒🍒விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு

🍒🍒எனது 3வது முறை ஆட்சிகாலத்தில் பெண்கள்,  விவசாயிகளை உயர்த்த பாடுபடுவேன்: பிரதமர் மோடி

பெண்களையும், விவசாயிகளையும் பலப்படுத்தவே எனது 3வது ஆட்சி காலத்தை துவக்கி உள்ளேன். 21ம் நூற்றாண்டில் இந்தியாவை உலகின் பெரிய 3 வது பொருளாதார நாடாக மாற்றுவதில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

🍒🍒ஜனநாயக நாட்டில் ஒரு அரசு தொடர்ந்து 3வது முறையாக அமைவது அரிதானது. ஆனால், இந்திய மக்கள் அதனை செய்து காண்பித்து உள்ளனர்.: வாரணாசி நன்றி அறிவிப்பில் பிரதமர் மோடி பெருமிதம்

இது இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அதற்கு பிறகு, இந்தியாவில் வேறு எந்த அரசும் அதே போன்று அமையவில்லை.

மக்களின் கனவுகளை நிறைவேற்ற அனைத்தையும் செய்வேன். நான் வாரணாசியை சேர்ந்தவன் என்றார்.

🍒🍒கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது தமிழ்நாடு அரசு.

👉பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வரும் 25ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு. இப்பட்டியலை வரும் 30ம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.

👉தொடர்ந்து ஜூலை 10ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தல்.

👉இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ₹3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

🍒🍒குற்றவியல் சட்டங்களுக்கு முதல்வர் எதிர்ப்பு

👉குற்றவியல் திருத்த சட்டங்களை அமல்படுத்துவதில் மாநில அரசுகளின் கருத்தினை கேட்க வேண்டும்.

👉அதுவரை புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் - உள்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

👉மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் கிரிமினல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது

👉3 சட்டங்களிலும் அடிப்படையில் தவறுகள் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

🍒🍒"நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கலைஞர்களுக்கு அரசுப் பேருந்துகளில் 50% பயண கட்டண சலுகை;

இசைக் கருவிகள், தொழில் கருவிகளை கட்டமில்லாமல் எடுத்துச் செல்லவும் அனுமதி

கிராமிய இசை மாணவர் ஆகாஷ் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டது குறித்து செய்தி எதிரொலியால்

அமைச்சர் சிவசங்கர் உத்தரவு

🍒🍒மாங்கனி திருவிழாவை முன்னிட்டு வரும் 21ம் தேதி காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

🍒🍒பாஜக கூட்டணியில் தான் உள்ளோம்.

ஆனாலும் நீட் இந்தியாவுக்கே வேண்டாம் என்பதே எங்கள் விருப்பம் 

அன்புமணி

🍒🍒தனது ஜன் சுராஜ் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் பிரசாந்த் கிஷோர்!

தனது ஜன் சுராஜ் இயக்கத்தை அக்.2ம் தேதி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!

2025 பீகார் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க திட்டம்

🍒🍒மணிப்பூர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்

அமித்ஷா உறுதி                                           🍒🍒அரசு பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க ஓட்டுநர், நடத்துநர்களை ஏற்பாடு செய்ய ஒப்பந்த புள்ளி கோரியது போக்குவரத்து துறை

திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் மண்டலங்களில் உள்ள பேருந்துகளை இயக்குவதற்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியீடு.

🍒🍒வந்தே பாரத் ரயிலில் மட்டுமே மத்திய அரசு கவனம் செலுத்துகிறது: ICF பொது மேலாளர் சுதான்ஷூ மணி கருத்து

AC ரயில் பெட்டிகளில் பயணிக்க முடியாத சாதாரண எளிய மக்களின் தேவைகள் மீது கவனம் செலுத்த இந்திய அரசு தவறிவிட்டது..

மேல்தட்டு மக்கள் பயணிக்க வந்தே பாரத் ஒரு நல்ல தேர்வு. ஆனால், AC பெட்டிகளில் பயணிக்க முடியாத சாதாரண எளிய மக்களின் தேவைகள் மீது கவனம் செலுத்த இந்திய அரசு தவறிவிட்டது. 

வந்தே பாரத் ரயில்கள் தொடர்ந்து இயங்கட்டும் ஆனால், Non-AC பெட்டிகள் கொண்ட ரயில்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது”

வந்தே பாரத் ரயில் திட்டத்தில் முக்கிய அங்கம் வகித்த முன்னாள் ICF பொது மேலாளர் சுதான்ஷூ மணி கருத்து

🍒🍒தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்வு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,695க்கும்,சவரன் ரூ.53,560க்கும் விற்பனை

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹உலக நாடுகள் அச்சம்

👉மனிதர்களின் தசையை தின்று 48 மணி நேரத்தில் ஆளையே கொள்ளும் புதிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

👉சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று உலகை அச்சுறுத்திய நிலையில் தற்போது இந்த ஜப்பான் பாக்டீரியா பொதுமக்களிடையே பெறும் பீதியை கிளப்பியுள்ளது. ஸ்டெப்டோ கார்க்கில் டாக்ஸிக் சோக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த புதிய நோய் மனிதர்களை தாக்கியதும் அவர்களின் தசைகளை தின்ன தொடங்கி பாதிக்கப்பட்ட நபர்களின் உயிரை பறித்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

👉காய்ச்சல் கடும் உடல் சோர்வு, மூட்டுவலி, தொண்டைவலி, மூச்சு திணறல், வீக்கம் போன்றவை இவற்றின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்றும் பின்னர் திசு மற்றும் உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டு மரணம் நிகழும் என்றும் டோக்கியோ மருத்துவ பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. இந்த பாக்டீரியா தாக்கி 48 மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட நோயாளி உயிரிழப்பர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

👉தற்போதைய நிலவரப்படி ஜப்பானில் 977 பேர் இந்த அரியவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் இது 2500ஆக உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

👉இதை அடுத்து ஜப்பானில் கொரோனா காலத்தில் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவை போன்று இது மிக வேகமாக பரவாது என்றாலும் இந்த புதிய பாக்டீரியா உலக நாடுகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.

🍒🍒🍒🍒🍒🍒🍒.

No comments:

Post a Comment