Sunday, June 16, 2024

செய்தித் துளிகள்-16.06.2024(ஞாயிற்றுக்கிழமை)


தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

⛑️⛑️நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் கேரள காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர் அமைப்பினரை தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் கலைத்தனர். திருவனந்தபுரம் தலைமைத் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கேரள காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

⛑️⛑️நீட் தேர்வு நடத்தியதில் தவறு கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வு நடத்தியதில் தவறு கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 

தேர்வு முறைகேடுகளை சகித்துக்கொள்ள மாட்டோம். முறைகேடுகள் கண்டறியப்பட்டால், தேசிய தேர்வு முகமையை பொறுப்பேற்க செய்வோம்”

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு

⛑️⛑️தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் நடத்தும் BVSc-AH படிப்புக்கு 9,039 மாணவர்களும், B.Tech படிப்புக்கு 1,872 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

⛑️⛑️பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 18ல் வெளியீடு

 12ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள் ஜூன் 18ல் வெளியிடப்படும்: 

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் ஜூன் 19 முதல் நுழைவுச்சீட்டு பெறலாம்:

அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்                    ⛑️⛑️தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார் பெட்டியை அமைக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி உத்தரவிட்டுள்ளார். 

இப்பெட்டிக்கு வரும் கடிதங்களை பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் முன்னிலையில்தான் திறக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரித்து பார்த்து, உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்ற நடைமுறை, ஏற்கெனவே பல பள்ளிகளில் அமலில் உள்ளது.

⛑️⛑️கல்லூரி மாணவர் சேர்க்கை ரத்து எனில் முழு கட்டணத்தை திருப்பி தர யுஜிசி உத்தரவு

⛑️⛑️விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது.

⛑️⛑️விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் டாக்டர் அபிநயா அறிவிப்பு

⛑️⛑️முன்பதிவு செய்த பெட்டிகள் சாதாரண பயணிகள் பயணிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை - மத்திய அமைச்சர் உறுதி

⛑️⛑️இமாச்சலப்பிரதேசத்தில் 114 டிகிரி வெப்பநிலை பதிவு - மக்கள் அவதி

⛑️⛑️கேரளாவில் வேகமெடுக்கும் பறவை காய்ச்சல் - கொத்து கொத்தாக காகங்களும் இறப்பதால் பரபரப்பு 

⛑️⛑️போப் பிரான்சிஸை சந்தித்த பிரதமர் மோடி - கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்தினார்.

⛑️⛑️அபுதாபியில் பறக்கும் டாக்ஸி சேவை சோதனை வெற்றி - அடுத்த ஆண்டு முதல் அமல் 

⛑️⛑️அமெரிக்கா சூப்பர் 8க்கு தகுதி பெற்றதால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற்றம் 

⛑️⛑️டி20 உலககோப்பை : 31வது லீக் ஆட்டத்தில், நேபால் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி

⛑️⛑️இந்தியா - கனடா இடையிலான நேற்றைய லீக் போட்டி மழையின் காரணமாக ரத்தானது.

⛑️⛑️சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களை இங்கே அழைத்து வந்து ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்: திருமாவளவன் பேச்சு

👉தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலினின் வியூகம்தான்.  சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களை இங்கே அழைத்து வந்து அவருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

⛑️⛑️2000 ஏக்கரில் அமையும் சிப்காட் மூலம் தர்மபுரி வளர்ச்சி அடையும் - 

அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

⛑️⛑️ஒரே நாடு, ஒரே தேர்தல் மீண்டும் உயிருட்ட பாஜக முயற்சி

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த உயர் மட்ட குழுவின் அறிக்கையை மத்திய அமைச்சரவையில் வைத்து ஆதரவு பெற பாஜக முடிவு!.

⛑️⛑️ஆதார் புதுப்பிப்பு:

இலவசமாக புதுப்பித்துக் கொள்ள செப்., 14 வரை அவகாசம்

⛑️⛑️அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிக்கை

கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டு நிறைவில் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றி சாதனை படைத்துள்ளது:

மருத்துவமனை தொடங்கப்பட்டு ஓராண்டில் 2,21,434 புறநோயாளிகள், 63.505 உள்நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர். இதுவரை 2,179 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது.

⛑️⛑️விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளராக சி.அன்புமணி போட்டி என அறிவிப்பு

⛑️⛑️சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.440 உயர்வு

ஒரு சவரன் தங்கம் 53,640 ரூபாய்க்கு விற்பனை

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.55 அதிகரித்து 6,705 ரூபாய்க்கு விற்பனை

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,640

⛑️⛑️"3வது முறை பிரதமர் ஆனது எனது அதிர்ஷ்டம்" 

இத்தாலியில் நடந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி பெருமிதம்

⛑️⛑️உக்ரைன் போர்- அமைதிப் பேச்சுக்கு தயார் 

ரஷ்யா அறிவிப்பு

⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️

🌹🌹2024-2025-SCERT - மொழிகள் - மாநிலம் தழுவிய ஆன்லைன் புத்தாக்க ஆசிரியர் பயிற்சி 18. 06. 2024 முதல் 28.06 வரை நடைபெறும். உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து ஆங்கிலக் கையாளுதல் ஆசிரியர்களுக்கும் 

மொழிகள் மொழி ஆய்வகத் திட்டம், மாணவர்களின் செவிமடுத்தல், பேசுதல் ஆகியவற்றை மேம்படுத்த உதவும் டிஜிட்டல் ஊடாடும் உள்ளடக்கத்தை ஆராய்வதற்கான சுய-வேக கற்றல் தளத்தை வழங்குகிறது. படிக்கும் மற்றும் எழுதும் திறன். மொழிகள் மொழி ஆய்வகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆங்கிலத்தைக் கையாளும் ஆசிரியர்கள், AY க்கான மொழிகள் மொழி ஆய்வகத் திட்டத்திற்கான மாநிலம் தழுவிய புத்தாக்க ஆசிரியர் பயிற்சியில் கலந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2024-25 18.06.2024 முதல் 28.06.2024 வரை ஊடாடும் பயிற்சி தொகுதிகள் மூலம் ஆன்லைன் பயன்முறையில் செய்யப்படும். HI-TECH ஆய்வகங்கள் அல்லது பள்ளிகளில் செயல்படும் இணைய இணைப்பு மற்றும் ஒரு ஜோடி ஹெட்செட்களுடன் கூடிய கணினிகளில் பயிற்சி பெறுமாறு ஆசிரியர்களுக்குத் தெரிவிக்குமாறு தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, அனைத்து மாவட்டங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் அந்தந்த மாவட்டங்களில் 2024 ஜூன் 28 ஆம் தேதிக்குள் பயிற்சியை நிறைவு செய்வதை உறுதிசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment