Tuesday, June 25, 2024

நித்திய கல்யாணி - தினம் ஒரு மூலிகை

ஐந்து இதழ்களை உடைய வெள்ளை அல்லது இளம் சிவப்பு நிற மலர்களையும் மாற்று அடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறும் செடி எல்லா பருவங்களிலும் பூக்கும் தன்மை உடையது சுடுகாட்டு பூ கல்லறைப் பூ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது

தானாகவே வளரக்கூடியது இதன் வேர் பூ ஆகியவை மருத்துவ பயன் உடையவை நாடி நடையை சமன்படுத்தவும் சிறுநீர் சர்க்கரையை குறைக்கவும் மருந்தாக பயன்படும் ஐந்து அல்லது ஆறு பூவை அரை லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி கால் லிட்டர் ஆக்கி ஒரு நாளைக்கு நாலு வேளை கொடுக்க அதித்தாகம் அதிமூத்திரம் உடல் பலவீனம் மிகு பசி பசியின்மை ஆகியவை தீரும் வேர் சூரணம் ஒரு சிட்டிகை வெந்நீரில் இரண்டு அல்லது மூன்று முறை கொடுக்க சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும் நோயும் கட்டுப்படும் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பதற்கும் பயன்படுகின்றன நன்றி

No comments:

Post a Comment