Friday, June 28, 2024

நீர் பிரம்மி - தினம் ஒரு மூலிகை

சாருள்ள மிக சிறு இலைகளை எதிர் அடுக்கில் கொண்டு சிறிய நீல நிற மலர்களை உடைய மிக குறுஞ்செடி நீர் உள்ள இடங்களில் தானே வளர்கிறது இலையே மருத்துவப் பயனுடையது சிறுநீர் பெருக்குதல் மலம் விளக்குதல் காமம் பெருக்குதல் ஆகிய

குணங்களை உடையது செடி முழுவதையும் நெகிழ அரைத்து எலுமிச்சை அளவு 200 மில்லி பசும்பாலில் கலந்து வடிகட்டி காலையில் மட்டும் பருகிவர கிராண்டி புண் புரைகள் சூலை மேகவெட்டை முதலியவை நீங்கும் இலை சாறுடன் மண்ணெண்ணையை நன்கு கலந்து மேல் பூச்சாக தேய்க்க கீல் வாத வலி வீக்கம் பிடிப்பு ஆகியவை தீரும் இளைச் சாறுடன் சம அளவு நெய் கலந்து பலமுறை காய்ச்சி வடித்து காலை மாலை ஒரு தேக்கரண்டியாக கொடுத்து வர சித்த பிரம்மை காக்கை வலி மிகப் பித்தம் முதலியன தீரும் இலையை அரைத்து பற்று போட வீக்கம் குறையும் இலையை வேகவைத்து அரைத்து மார்பில் கட்டி வர சளி மிகுதியால் வரும் இருமல் குணமாகும் நன்றி.

No comments:

Post a Comment