Saturday, June 15, 2024

பட்டாணி சுண்டல் சாப்பிட்டு இருக்கீங்களா

 *.* அதுவும் பேருந்து நிலையத்துல நம்ம பஸ்க்காக காத்திருக்கும் போது பக்கத்துல வந்து மணியடிச்சு காட்டி நம்மல வெறுப்பேத்தி கடைசியா நம்மளையும் வாங்க வச்சிடுவாரு அந்த தள்ளுவண்டி அண்ணாச்சி. அந்த நேரத்துல அந்த பட்டாணி சுண்டல் சூடா காரசாரமா இருக்கும். அதை சாப்பிட்டு முடிச்சதும் இதமா ஒரு டீ குடிக்கணும் போல தோணும். ஆனா அதுக்குள்ள நம்ம பஸ் வந்துடும். இப்படிதான் பெ

ரும்பாலும் நம்ம நேரம் ஒர்கவுட் ஆகாது. சரி வீட்லயே செஞ்சி சாப்பிடலாம்னா அந்த சுவைல நமக்கு செய்ய வராது.


அதுக்குத்தான் இந்த பதிவுல வீட்லயே தள்ளுவண்டி சுண்டல் எப்படி செய்யலாம்னு சொல்ல போறேன். இதை நான் பல தடவை வீட்ல செஞ்சிருக்கேன். எப்பவுமே செஞ்ச பாத்திரம் அடுத்த பத்து நிமிசத்துல காலியாகிடும். நான் சொல்ற அதே செய்முறையில செஞ்சி பாருங்க.


தேவையான பொருட்கள் :


பட்டாணி 250 கிராம்

தக்காளி 100 கிராம்

வெங்காயம் 200 கிராம்

கேரட் 100 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்

கரம் மசாலா 3 ஸ்பூன்

உப்பு தேவையான அளவு


பட்டாணியை தண்ணில 3 மணி நேரம் நல்லா ஊற வச்சி அதை அப்படியே ஒரு குக்கர்ல 6 விசில் வர்ற வரைக்கும் வேக வச்சிடுங்க. பட்டாணி ஒரளவுக்கு குழைவா வெந்திருக்கணும். ஒரு சட்டில தேவையான அளவு எண்ணெய் விட்டு 100 கிராம் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமா வதக்கிடுங்க. அது கூட இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போக நல்லா வதக்கிடுங்க. அதோட நறுக்கின தக்காளியையும் சேர்த்து வதக்கிடுங்க. தேவையான அளவு உப்பு சேர்த்துட்டு அது கூட கரம் மசாலா சேர்த்து பச்ச வாசம் போக வதக்கிடுங்க. வேகவச்ச பட்டாணியை அது கூட சேர்த்து நல்லா கிளறிவிடுங்க. அவ்வளவுதான்.


அப்படியே ஒரு கப்ல எடுத்து வச்சிட்டு அது மேல நறுக்கின வெங்காயத்தையும் நறுக்கின கேரட்டையும் தூவிடுங்க. வீட்ல மாங்கா இருந்தா அதையும் மெல்லிசா நீட்டு வாக்குல நறுக்கி மேல தூவிக்கோங்க. இப்போ அந்த பட்டாணி சுண்டல சாப்பிட்டு பாருங்க 😋 சுவை சும்மா அதிரும்... இப்போ அது கூடவே ஒரு காபியோ இல்லை டீயோ உங்களுக்கு பிடிச்சதை குடிச்சு பாருங்க.... உங்க நேரம் இப்போ சரியா ஒர்கவுட் ஆகும்.

No comments:

Post a Comment