Sunday, June 16, 2024

தேற்றான் கொட்டை - தினம் ஒரு மூலிகை

 


*தேற்றான் கொட்டை* பளபளப்பான சற்று நீண்ட கரும்பச்சை இலையினையும் உருண்டையான விதையுடைய குறு மரம் தேற்றான் கொட்டையை கலக்கிய நீரில் சிறிதே உரைப்பதால் நீர் தெளிந்து விடும் நீரை தெளிவித்தலும் உடலை தேற்றுதலாலும் இதை தேற்றான் கொட்டை என பெயர் இதன் பழம் விதை மருத்துவ பயன் உடையது பழம் வாந்தி உண்டாக்கும் சீதபேதியை கட்டுப்படுத்தும் விதை உடல் தேற்றுதல் உடல் பலம் மிகுத்தல் பசி தூண்டுதல் சளி அகற்றுதல் அக உறுப்புகளின் வளர்ச்சியை தனித்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது பழ சதையை உலர்த்தி வைத்துக்கொண்டு அரை கிராம் வரை கொடுத்து வர சீதபேதியை கட்டுப்படுத்தும் பழச்சாற்றை தூய்மையான துணியில் நனைத்து உலர்த்தி வைத்துக் கொண்டு தேவையானபோது நீரில் இட்டு கசக்கி வடிகட்டி சளி மிகுதியால் துன்பப்படும் சிறு குழந்தைகளுக்கு கொடுக்க சளி வாந்தியாகி நோய் குணப்படும் ஒரு கொட்டையை முற்றிலும் உரைத்து மோரில் கலந்து கொடுக்க நாள் பட்ட பேதி நிற்கும் பாலில் கலந்து கொடுக்க நீர் எரிச்சல் நீர் கடுப்பு வெள்ளை மதுமேகம் தீரும் விதையை ஊற வைத்து மெழுகு போல் அரைத்து தடவி வர வீக்கம் கரையும் நன்றி

No comments:

Post a Comment