Wednesday, June 5, 2024

செங்கொன்றை - தினம் ஒரு மூலிகை


*செங்கொன்றை* சிறகமைப்பு கூட்டு இலைகளையும் இளம் சிவப்பு நிற பூங்கொத்துக்களையும் உருளை வடிவ காய்களையும் உடைய மரம் பட்டை வேர் பூ ஆகியவை மருத்துவ பயன் உடையது வேர்ப்பட்டை 100 கிராம் ஒரு லிட்டர் நீரில் இட்டு இருநூறு மில்லியாக காய்ச்சி காலையில் குடித்து வர உடல் பலம் அழகு வசீகரம் உண்டாகும் சொறி தினவு சிரங்கு மேக ரணம் வாதம் வாத வலி ஆகியவை தீரும் மரப்பட்டையை மேற்கண்டவாறு சாப்பிட வயிற்றுப் பூச்சி நீங்கும் மர பட்டை வேர் பட்டை வில்வ பழவோடு சமன் சூரணம் கால் தேக்கரண்டி பாலில் சாப்பிட்டு வர ஓரிரு மண்டலத்தில் வெண்மேகம் தோல் வெலுப்பு சொரி தினவு ஆகியவை தீரும் தேங்காய் எண்ணெயில் கலந்து மேல் பூசலாம் கொன்றை பட்டை தூதுவேளை சமூலம் சம அளவு எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி தேனில் காலை மாலை நீடித்து சாப்பிட ஆஸ்துமா தீரும் 200 கிராம் பூவை மையாய் அரைத்து மோரில் உட்கொள்ள நீரழிவு நோய் தீரும் நன்றி.

No comments:

Post a Comment