Friday, June 7, 2024

தண்ணீர் விட்டான் கிழங்கு - தினம் ஒரு மூலிகை

 *


**தண்ணீர் விட்டான் கிழங்கு* (அ)நீலாவரிக்கிழங்கு  வளைந்த கூரான முட்களையும் முக்கோண இலைகளையும் நிறை சாறு நிறைந்த கிழங்குகளை உடையது காடுகளிலும் வேலிகளிலும் வளரும் கொடி இலை கிழங்கு மருத்துவ பயன் உடையது கிழங்குகள் உடலுரமூட்டுதல் பால் பெருக்குதல் வெப்பம் தணித்தல் இசிவு அகற்றுதல் காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவ பயன் உடையது தண்ணீர் விட்டான் கிழங்கு என்பது சர்வ லோக நிவாரண மூலிகை ஆகும் நம் உடம்பில் ஏற்படும் பலவிதமான நோய்களை சரி செய்து உடலை வலுப்படுத்தும் சக்தி தண்ணீர் விட்டான் கிழங்கில் உள்ளது பெண்களுக்கு இந்த கிழங்கு ஒரு வரப்பிரசாத மூலிகை ஆகும் இதை நீலா வரி கிழங்கு எனவும் அழைப்பார்கள் கிழங்கை பால் விட்டு அரைத்து காய வைத்து பொடி செய்து தினம் இரு வேலை சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும் கிழங்கு பொடியை பாலில் கலந்து தினமும் அருந்தி வர உடல் உஷ்ணம் குணமாகும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை வெட்டை சூடு போன்ற நோய்களும் குணமாகும் கிழங்கு இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது கிழங்கு பொடியை பாலில் கலந்து தொடர்ந்து அருந்தி வர தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும் நன்றி.

No comments:

Post a Comment