Monday, June 3, 2024

வாழ்க்கையில் முக்கியமானது என்பது என்ன?????

ஏழையிடம் கேட்டா பணம். பணக்காரனிடம் கேட்டா ஆரோக்கியம், நேரம், நிம்மதி.


அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்துதான் நமக்கு எது முக்கியம்னு நாம சொல்லமுடியும். இப்போ ட்ரெயின்ல அன்ரிஸர்வ்ட் கம்பார்ட்மெண்டுல கால் வலிக்க நின்னுகிட்டு போறவன்கிட்ட போய் உனக்கு இப்ப உனக்கு வேணும்னு கேட்டா உக்காறதுக்கு ஒரு சீட் வேணும்னு சொல்லுவான். அந்தந்த சூழ்நிலைல நமக்கு எது தேவைப்படுதோ அதுதான் முக்

கியம்.


மாசச் சம்பளம் வாங்கி, கடனுக்கு வட்டி கட்டி, மாசக்கடைசில யாருகிட்டயாவது கை ஏந்தி நிக்குற வெகுஜன மக்களிடத்தில் கேட்டா பணம் தான் முக்கியம்னு சொல்லுவாங்க.


இதையே ஒரு தொழிலதிபர் பணக்காரன்கிட்ட வாழ்க்கைல எது முக்கியம்னு கேட்டா ஆரோக்கியம், நேரம், நிம்மதி இதுதான் முக்கியனும் சொல்லுவாங்க.


நம்மகிட்ட எது இல்லையோ அதுதான் நமக்கு வாழ்க்கைல முக்கியம்னு சொல்லுவோம். பெரும்பாலும் நாம தேடி ஓடிக்கிட்டு இருக்குற ஒரு விஷயம் அதை அடைஞ்ச பிறகு தான் தெரியும் அது நமக்கு முக்கியம் இல்லாததுன்னு.


பணம் இல்லாதவனுக்கு பணம் ஒன்னு தான் பிரச்னை. ஆனா பணம் இருக்குறவனுக்கு ஆயிரம் பிரச்னை.


என்னோட ஆசை என்னன்னா உலகத்துல இருக்குற எல்லாரும் பணமும், புகழும் இருக்குறவங்களா மாறனும். அந்த பணம் புகழ வச்சு அவங்க செய்ய நினைச்சது எல்லாத்தையும் செய்யணும். அதுக்கப்புறம் தான் அவங்களுக்குத் தெரிய வரும் பணம், புகழ் மட்டும் வாழ்க்கைக்கான பதில் இல்லைனு!


இதச் சொன்னது பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி.


என்னைக் கேட்டா நமக்காக நாம எவ்வளவு நேரம் செலவு பண்ணிருக்கோம். அதான் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானது. கடைசியா நீங்கா எப்போ சும்மா இருந்தீங்க. சும்மான்னா சும்மா. மொபைல் நோண்டாம, டிவி பாக்காம வெறுமனே சும்மா இருக்கனும்.


பெரும்பாலானவங்க அப்படி ஒரு நாள்ல ஒரு நிமிஷம் கூட அப்படி இருந்திருக்க மாட்டீங்க. உங்களுக்காக ஒரு அரை மணி நேரம் சும்மா உக்காருங்க. உங்களப் பாத்து நீங்களே கேள்வி கேளுங்க. நாம் ஏன் இதைப் பண்றோம்.? இது நமக்கு தேவைதானா?. இப்படி நிறைய கேள்வி உங்ககிட்டேயே கேளுங்க. என்ன கேள்வி தோணுதோ கேளுங்க. இப்படி தொடர்ந்து பண்ண உங்களைப் பத்தி உங்களுக்கே ஒரு புரிதல் கிடைக்கும். அப்புறம் ஒவ்வொரு நாளும் உங்களுக்காக நீங்க செலவளிக்கிற இந்த அரை மணி நேரம் தான் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்னு தெரியவரும்.


~அன்பு செய்வோம்!

No comments:

Post a Comment