Monday, June 3, 2024

சீமைய அகத்தி - தினம் ஒரு மூலிகை

 *


 *சீமைய அகத்தி*  நீண்ட பெரிய இலைகளையும் மஞ்சள் நிற பூ கொத்தனையும் சிறகுள்ள விதைகளையும் உடைய குறும் செடி இதன் இலை பூ வே மருத்துவ பயன் உடையது ஒட்டுண்ணிகளன நுண்ணுயிர்களை கொல்லவும் கழிச்சல் ஏற்படுத்தும் மருந்தாக பயன்படும் இலையை எலுமிச்சை சாறு கலந்து அரைத்து பற்று போட கரப்பான் புண்கள் புரையோடிய புண்கள் குணமாகும் 15 கிராம் இலையை 500 மில்லி நீரில் இட்டு 125 மில்லியாக காய்ச்சி வடிகட்டி மூன்று பங்காக்கி காலை மதியம் இரவு சாப்பிட்டு வர கரப்பான் அரிப்பு வண்டு கடி சொறி ஆகியவை தீரும் இலைகளை குறுக அறிந்து நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி புண்புரைகளை கழுவ புண்கள் சொறி ஆகியவை தீரும் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும் இலை பூ வகை 10 கிராம் அரை லிட்டர் நீரில் இட்டு 125 மில்லியாக காய்ச்சி 3 சமபங்காக்கி காலை மதியம் இரவு சாப்பிட்டு வர இருமல் தொண்டை கரகரப்பு நீங்கும்.

நன்றி........

No comments:

Post a Comment