Tuesday, June 4, 2024

35% சர்க்கரை கூடவே தண்ணீர்

மற்றவர்கள் இதனை அறிந்துகொள்வது நல்லது என நினைத்து நீங்கள் பகிர விரும்பும் ஒரு விஷயம் எது?


இதோ இதைத்தான், நான் உடல்நலக் குறைவால் இருந்ததால் இதை எல்லாம் தெரிந்து கொண்டேன் . இதைத்தான் மற்றவர்கள் தெரிய பகிர விரும்புகிறேன்.


மில்க் ஷேக்ஸ்::


இது பிரபல நிறுவனத்தின் பாதாம் மில்க்.


கிட்டத்தட்ட 25 கிராம் சீனி இரு

க்கு இதில். (விலை 35 ரூபாய் , உடம்பு தெண்டம் ஆகிடும்)


இதில் 180 மிலி, 3/4 டம்ளருக்கு 4 முதல் 5 ஸ்பூன் சீனி, பிரிட்டானியா மில்க் ஷேக் இது.

கார்பனேட்டடு தண்ணீர்::


எப்போ பாரு, பவன்டோனு , நாங்க வீட்டில் அலைவோம். ஏன் என்றால் நினைப்பது இந்தியாவில் செய்தது.

இது கோக் கோலா போல வெளிநாட்டு கம்பெனி இல்லை என நினைப்பு, இது நல்லதுன்னு வேற நினைப்பு.

ஆனால் அந்த பவன்டோ கூட ஏமாத்தி விட்டது தான் உச்ச கொடுமை.

85 %சதவிகிதம் சீனி தண்ணீர். கூடவே chemical, செயற்கை கொண்டு சாயம் ..ச்ச..ச்ச..நிறமூட்டப்பட்டதாம்.

இதிலும் அதே தான்…Mirinda, thumps up அவ்வளவும் செயற்கை நிற சாயம் , செயற்கை நிற மூட்டிகளால் செய்தது தான்.


ஆக அது Bovonto / coke pepsi Mirinda thumps up எல்லாம் குப்பை, ஏகப்பட்ட சர்க்கரையை போட்டு கலக்கிய தண்ணீர் தான். உடலுக்கு அவ்வளவு கெடுதல்.

ORS::


இதைத்தான் டாக்டர் நிறைய பேர் எழுதுறாங்க. ORS குடிங்க, எனர்ஜி வரும்.

வயிறு வலி, உடல் சோர்வு, வயிற்றுப் போக்குனு, வாந்தி பேதி, எது வந்தாலும் ORS எழுதி குடுத்துடுவாங்க.


இதான் எனக்கு வாங்கியது.என் கையில் இருக்கிறது.

நமது மருந்து கடையில் கிடைப்பது வகை வகையாக ORS, பல பழச்சுவைகளில் கிடைக்கும் தானே?

இதில் பார்த்தால் ஒன்று தெரியும். இந்த தடவை என் ஹாஸ்பிடல் வாசத்தில் இதை எல்லாம் நான் அறிந்தேன்.


மேல் குறிப்பிட்டு இருப்பது ORS DRINK . அப்படியே கீழே பாருங்கள்.


NOT AN ORS.


என் கையில் உள்ளதும் குறிப்பிட்டு இருக்கிறேன். எதுக்கு உபயோகப்படுத்த கூடாது என்று. எனக்கு உடல் சோர்வுக்குனு எழுதிக் கொடுத்தார்.


இது என்ன இப்படி இருக்கு. 4 பாக்கெட் ORS வாங்கினால் எதுவும் ORS இல்லியாம். இப்படியா ஏமாற்றுவது?

என்னடா..இப்படி ஏமாத்துறீங்கனு நினைச்சி நொந்துக்கொண்டேன்.

ஜூஸ் வகைகள்


சரி பிரபலமான ஜூஸ் ஏமாத்த மாட்டாங்கனு பார்த்தால், அதுவும் பெரிய அதிர்ச்சி.

நம்மோட பேப்பர் போட், 90ஸ் கிட்ஸ்னு சொல்லி விளம்பரப்படுத்தியே, இந்த 90ஸ் பிள்ளையை இப்படி ஏமாத்திட்டியே?..ச்ச..ச்ச..

இதில் வெறும் 6.5 தான் ஜூஸ், அப்போ மிச்சம், 35% சர்க்கரை கூடவே தண்ணீர்.


சீனித்தண்ணீரில் , 6 சதவிகிதம் பழச்சாறு போட்டு சீனித்தண்ணியை ஜூஸ்னு விற்பது எந்த விதத்தில் நியாயம்?

அடுத்தது, 100 சதவிகிதம் பழச்சாறாம். கடவுளே!


இதோட பழச்சாறு அளவுகளின் மொத்தத்தை பார்த்தால் மேலும் அதிர்ச்சி. அதுவும் 20 % சதவிகிதம் தான் பழச்சாறு.


இங்கு பழச்சாறு எவ்வளவு என குறிப்பிட்டு இருக்காங்க. பார்த்தால் போதும் நமக்கு உட்கார வச்சு தலையில் சட்னி. இதுவும் பயங்கர அதிர்ச்சி தான் எனக்கு கொடுத்தது.

என்னடா மொத்தமா ஏமாத்துறீங்களேனு இருந்தது.

சரி அடுத்தது அதிகபட்சமாக பள்ளி குழந்தைகள் குடிப்பது, இதோ இந்த Real fruit juice.


இதில் Real fruit juice..பெயர் தான் ரியல் ஜூஸ், அதிலும் 20 சதவிகிதம் தான் பழச்சாறு .

அப்போ மிச்சம் சீனியும் தண்ணீரும் தான்.

எல்லாம் சரி, ஆனால் எது உண்மையான ORS, அதை மட்டும் நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.


இதோ இது தான், WORLD HEALTH ORGANIZATION (WHO), உலக சுகாதார நிறுவனம் உலகிற்கு பரிந்துரைக்கும் ORS.


இது 10 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதை தான் ORS என நாம் பார்த்து வாங்க வேண்டும்.


பிறந்த குழந்தை முதல் வயதானவர்களை வரை ORS இல்லாததை அடிக்கடி குடிப்பதை பார்க்கலாம். இதை தெரிந்து கொள்ளவேண்டும்.


இதனால் என்ன தெரிகிறது , என்றால் நாம் குடிக்கும் அவ்வளவும் ….


செயற்கை வாசம்..

செயற்கை நிறமூட்டப்பட்ட சாயம் ..

அதிகப்படியான சர்க்கரை,..

அதிகப்படியாக தண்ணீர்..

வெறும் 20 சதவிகிதம் மட்டும் பழம்/ பழச்சாறு

பெரிய பிராண்டட் நிறுவனங்கள் 100 சதவிகிதம் ஜூஸ் என அல்வா கிண்டி மக்களை நன்றாக முட்டாள் ஆக்குகிறது.

இதுக்கு சர்க்கரை தண்ணீர் என்று பெயரை வச்சு, சர்க்கரை வியாதி கியாரண்டி என போட்டே விற்கலாம்.


இனியாவது, நம் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கும் சொல்லிக் குடுக்க வேண்டும். இவற்றை எல்லாம். முயன்று பார்க்கலாம், தற்போதைய பெற்றோர்கள்.


அப்போது தான் வருங்கால சந்ததியினர், மற்றும் இந்த தலைமுறையினர், இந்த சர்க்கரை கரைசலை குடித்து சர்க்கரை வியாதி வராமல் காக்கலாம்.


'வாங்குபவர்களுக்கு தான் ஆயிரம் கண்கள் வேண்டும், விற்பவனுக்கு இல்லை "என்ற பழமொழியை மறந்தது நம் தவறு என புரிந்தது எனக்கு…

No comments:

Post a Comment