Saturday, June 8, 2024

தழுதாழை - தினம் ஒரு மூலிகை

 *

 *தழுதாழை* 

 வெளீர் பச்சையான எதிர் அடிக்கில் அமைந்த இலைகளை உடைய குறும் செடி, புதர்களின் தானே வளரும் இலையே மருத்துவ பயன் உடையது நோய் நீக்கி உடல் தேற்றும் தன்மை உடையது அனைத்து வாத நோய்களுக்கும் சிறந்த மூலிகையாகும் இலையை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க சுளுக்கு கீழ்ப்படிப்பு மூட்டு வலிகள் தீரும் சாற்றை மூக்கில் உறிஞ்சி வர மண்டை குடைச்சல் மூக்கில் நீர் வடிதல் தும்மல் சளி சிறிது சிறிதாக குறையும் இலையை ஆளி விதை எண்ணையில் வதக்கி கட்

ட யானைக்கால் வீக்கம் விரைவாதம் வாத வீக்கம் நெறி கட்டுதல் தீரும் நீரில் கொதிக்க வைத்து குளிக்க வாத வலிகள் அனைத்தும் நீங்கும் தழுதாழை வேரை நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி வடித்து மூட்டு வீக்கம் வலி ஆகியவற்றில் தடவ குணமாகும் சித்த மருத்துவத்தில் வாத நோய்களைப் போக்கும் அருமருந்தாக தழுதாழை உள்ளது பக்கவாதம் முதலான 80 விதமான வாத நோய்களை போக்கும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பாலவாதம் எனப்படும் இளம்பிள்ளை வாதம் ஏற்படும் முடக்கு நிலை நீங்கும் நன்றி

No comments:

Post a Comment