Saturday, June 8, 2024

🎧இயர் போன் அதிகமாக பயன்படுத்துபவரா நீங்கள்?

 **

*🎧தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் இன்றைய காலத்தில் இளம் பெண்கள், இளம் வாலிபர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் வாகனம் ஓட்டி செல்பவர்கள் என அவர்களது காதுகளில் இயர் போன் நிச்ச

யம் இல்லாமல் இருக்காது. நீங்கள் அதிகம் இயர் போன் பயன்படுத்துபவர்களா? அப்படி என்றால் கண்டிப்பாக இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.*


*🎧பயணம் செய்யும் போது இயர் போன் இல்லாமல் எங்கும் செல்வதில்லை. அதுவும் குறிப்பாக பஸ்ஸில் அதிக நேரம் பயணம் மேற்கொள்ளும்போது, காதில் இயர் போனை மாட்டி, பேசி கொண்டோ அல்லது பாடல் கேட்டு கொண்டோ செல்வார்கள். ஆனால் இதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி யாரும் யோசிப்பது இல்லை.. அதனை பற்றி எடுத்து கூறினாலும் அதனை அலட்சியமாக எடுத்துக்கொள்வார்கள்.*


*🎧பொதுவாக இயர் போனை மாட்டிக் கொண்டு 20 முதல் 30 நிமிடங்கள் வரை தான் அதிகபட்சம் பேச வேண்டும். அதற்கு மேல் நாம் இயர் போனை பயன்படுத்தினால், காதில் இருக்கும் கார்டிலேஜ் என்னும் மென்மையான எலும்பை இந்த இயர் போன் அழுத்திக் கொண்டே இருப்பதால், இவை பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது.*


*🎧அதிக நேரம் தொடர்ந்து இயர் போனை பயன்படுத்தினால், ஒலி அலைவரிசை வெவ்வேறு ஒலியளவில் காதுகளை அடைவதால் காதில் உள்ள சவ்வு கிழிவதற்கோ அல்லது தளர்வடைவதற்கோ காரணமாகிறது.*


*🎧மேலும் காதுகளில் உள்ள மென்மையான பகுதிகளில் வீக்கங்களோ, சிறிய கொப்புளங்களோ ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.*


*🎧இயர் போன் பயன்படுத்துவதால் இளம் வயதிலேயே கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு காது நன்றாக கேட்பதற்கான மெஷின்களை பயன்படுத்த நேரிடுகிறது.*


*🎧தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற வியாதிகள் வர, அதிக நேரம் இயர் போன் பயன்படுத்துவதும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.*


*🎧அதிக நேரம் இயர் போன் பயன்படுத்துவதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையும்.*


*🎧நீண்ட நேரம் இயர் போன் உபயோகிப்பதினால் உருவாகும் மின்காந்த அலைகள், மூளையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.*


*🎧பயணத்தின் போது இயர் போன்கள் உபயோகிப்பது, உங்களுக்கு பயணத்தை எளிதாக்க ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. மற்ற நேரங்களை காட்டிலும் பயணத்தின்போது இயர் போன் உபயோகிப்பதால் கவனக்குறைவால் இருமடங்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.*


*🎧இயர் போனை தொடர்ந்து பயன்படுத்தாமல், ஒரு மணி நேரத்திற்கு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் இடைவெளி விட்டு தான் பயன்படுத்த வேண்டும்.*


*🎧ஒருவர் பயன்படுத்திய இயர் போனை, மற்றவர் பயன்படுத்தக் கூடாது. அதனால் கூட, பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.*


*தவிர்க்கும் வழிமுறைகள்:*


*🎧இயர் போனில் சத்தம் அதிகமாக வைத்து கேட்பதை தவிர்க்கவும். ஒலியின் அளவு 85 டெசிபலுக்கு அதிகமாக இருந்தால், காதுகள் கேட்கும் தன்மையை இழக்க நேரிடுகின்றது.*


*🎧காதில் மாட்டும் போது, வெளிக்காற்று உள்செல்லும்படி ஒருபுறமாக சாய்த்து, பயன்படுத்த வேண்டும்.*


*🎧சார்ஜ் ஏற்றிக்கொண்டு போன் பேசுவது, இன்டர்நெட் பயன்படுத்துவது, இயர் போனில் பாடல் கேட்பது போன்ற பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.*


*🎧நவீன தொழில்நுட்ப கருவிகளை எதை பயன்படுத்தினாலும், அளவாக பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.*

No comments:

Post a Comment