Tuesday, June 11, 2024

சுறுசுறுப்பின் வெளிச்சத்தில் இருங்கள்.

பாசிட்டிவ்வாக வாழ்க்கையை எதிர்கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல...*_

_*ஆனால்...*_

 _*பழக்கப்படுத்திவிட்டால் வாழ்க்கையில் நீங்கள்*_

_*சந்தோஷமாக இருப்பதை*_

_*யாராலும் தடுக்க முடியாது .*_


 _*மண் போல் மன

தை*_

_*மாற்றிவிடுங்கள்....*_

_*நல்ல சிந்தனைகளை முளைக்கவிடுங்கள்.....*_

_*கெட்ட சிந்தனைகளை*_

_*மக்க செய்து விடுங்கள்.*_


_*குறை காணும் பழக்கத்தைக் கைவிடுங்கள். உங்களைச் சுற்றித் தென்படும் நல்லதை மட்டுமே காண்பதில் அக்கறை காட்டுங்கள்.*_


_*யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பது கூடாது. தனக்கு தேவையானவற்றை சுயமாகவே தேடிக் கொள்வதே சிறந்தது.*_


ஒருமுறை ஒரு மன்னர் தனது குதிரையில் ஏறிக் கொண்டு நகர்வலம் வரப் புறப்பட்டார்.


நகரத்தை விட்டு நெடுந்தூரம் சென்று சிறு கிராமத்தை அடைந்தார். அக்கம்பக்கம் பார்த்தார். ஒரு சிறுவன் அவரை நோக்கி வந்தான்.


வந்த சிறுவனைப் பார்த்து, "தம்பி இங்கே வா!" என்றார் மன்னர்.


அவர்அருகில் சென்றான்.


"தம்பி இந்தக் குதிரையை சிறிது நேரம் பார்த்துக் கொள்ளப்பா... சற்ற தூரம் சென்றுவிட்டு வருகிறேன்" என்றார் மன்னர்.


சிறுவன் குதிரையைப் பார்த்து, "உங்கள் குதிரை கடிக்குமா?"

"கடிக்காதப்பா, மிகவும் அமைதியான குதிரை" என்றார் மன்னர்.

ஓஹோ! கடிக்காது என்றால்  உதைக்குமோ?" யாரையும் உதைக்காது என் குதிரை"


"அடடா.. உதைக்காதா.. அப்ப ஓடுமா?"


"நான் ஒரு வார்த்தை சொன்னால் போதும். நான் வரும்வரை அவ்விடத்தைவிட்டு அசையாது” என்றார் மன்னர்.


சிறுவன் மன்னரைப் பார்த்து, "அசையாத குதிரையைப் பிடித்துக்கொண்டு, வேலை மெனக்கெட்டு என்னை ஏன் நிற்கச் சொல்கிறீர்கள்?" என்று சொல்லி விட்டு... சிட்டாகப் பறந்தான் அவன்.


சோம்பலாய் இருப்பவர்களுக்கு எந்த வேலையும் ஓடாது. எதையும் செய்யத் தோணாது.  சுறுசுறுப்பானவர்களுக்கு ஓரிடத்தில் நிற்கத் தோணாது.


"சோம்பேறியாக இருந்துவிட்டால் சோறு கிடைக்காது தம்பி! சுறுசுறுப்பில்லாம தூங்கிக்கிட்டிருந்தால் துணியும் இருக்காது தம்பி!"


என்ற திரைப்பாடலை மனசில் அறையுங்கள்.


சோம்பல் மனித வாழ்வை சாம்பலாக்கிவிடும் என்பதை உணர்ந்து செயல்பட்டு முன்னேறுங்கள்.


சோம்பலின் நிழல்கூட உங்கள் மீது படக்கூடாது. 

*"எப்போதும் சுறுசுறுப்பின் வெளிச்சத்தில் இருங்கள். அப்போதுதான் மின்னுவீர்கள்"* என்கிறார் டூபாண்ட் கைட்  என்ற ஆஸ்திரிய அறிஞர்.


*ஒருவர் நம்மை நோகடிப்பதற்காக*

*மட்டம் தட்டிப் பேசும் போது* அவர்களை 

*திருப்பி நாமும் மட்டம் தட்டி பேச*

*வெகு நேரம் ஆகாது.*

*அவ்வாறு செய்யாமல்*

*இருப்பதற்கான காரணம்*

*நாமும் அவர்களைப் போல*

*சாக்கடை மனம் படைத்தவர்*

*அல்ல என்பதை காட்டத் தான்.*


_*சிங்கமாய் இருந்தாலும் பிறர் கண்ணுக்குப் பூனையாய்ப் இரு,*_

_*நம் பலம் என்னவென்று நமக்கு மட்டும் தெரிந்தால் போதும், பிறருக்கு உனது பலத்தை செய்கையில் காட்டு.*_

No comments:

Post a Comment