Tuesday, June 11, 2024

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள்?

வழிக்கு கொண்டுவருவது எப்படி? இதை பின்பற்றுங்கள் போதும்!*

😊😊😊

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள்? வழிக்கு கொண்டுவருவது எப்படி? இதை பின்பற்றுங்கள் போதும்!*_

😊

உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான உணவு உட்கொள்ள ஊக்குவியுங்கள்உங்கள் குழந்தைகள் சாப்பிட, பருகுவதற்கு மற்றும் உறங்குவதற்கு என அனைத்துக்கும் அவர்களை ஊக்குவிக்கவேண்டும். இது

அவர்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இப்போது குழந்தைகள் நீண்ட கோடை விடுமுறையில் வீட்டில் இருந்துவிட்டு, பள்ளி செல்ல தயாராகிவிட்டார்கள்.அவர்கள் வீட்டில் விடுமுறையில் இருந்த காலத்தில் அவர்களின் அட்டவனைகள் மாறியிருக்கும். அவர்கள் உறங்கும் நேரம், சாப்பிடும் நேரம் என அனைத்திலுமே மாற்றம்தான் இருக்கும். எனவே அந்த மாற்றத்தை திரும்பவும் வழக்கத்துக்கு கொண்டுவரவேண்டும்.😊



உதாரணமாகுங்கள்உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான உணவை உட்கொள்ள செய்வதில் ஒரு முக்கிய வழி என்றால், அவர்களுக்கு உதாரணமாவதுதான். குழந்தைப்பருவம் முதல், குழந்தைகள் பெற்றோரை அப்படியே பின்பற்றுகிறார்கள். எனவே குழந்தைகள் நற்பழக்கத்தை கடைபிடிக்கவேண்டுமெனில், பெற்றோர் முதலில் நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இதனால் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு உணவுகளை நீங்களும் உட்கொண்டு, அதை உங்கள் குழந்தைகளும் சாப்பிட ஊக்கப்படுத்தி, உதாரணமாக வேண்டும்.😊


உணவு தயாரிப்பதில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்உங்கள் குழந்தைகளையும் உணவு தயாரிப்பதிலும், உணவு என்ன செய்யவேண்டும் என்று திட்டமிடுவதிலும் ஈடுபடுத்துங்கள் அப்போதுதான் அது எப்படி இருக்கும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். மேலும், உணவு எவ்வளவு சிரமப்பட்டு தயாரிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து அவர்கள் அதை வீணாக்காமல் உட்கொள்வார்கள். உங்கள் குழந்தைகளை மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கும் அழைத்துச் செல்லலாம்.


ஸ்னாக்ஸ்களை அவர்கள் எடுக்கும் இடத்தில் வைக்கவேண்டும்உங்கள் குழந்தைகளுக்கு நட்ஸ்கள் மற்றும் பழங்களை மட்டும் ஸ்னாக்ஸாக கொடுங்கள். அதை அவர்கள் எளிதாக எடுக்கும் இடத்தில் வையுங்கள். குழந்தைகளின் ஸ்னாக்ஸ் பழக்கம் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கவேண்டும்.ஏனெனில், குழந்தைகள் சாப்பாட்டைவிட ஸ்னாக்ஸைத்தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே அது ஆரோக்கியமானதாக இருந்தால், அவர்களின் ஆரோக்கியம் மேலும் உறுதிப்படுத்தப்படும். தயிர், யோகட் ஆகியவற்றையும் ஸ்னாக்ஸாக வைத்திருங்கள்.


ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம்உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் என்னென்ன நன்மைகளைக் கொண்டு வருகிறது என்றும், அதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக்கூறுங்கள். பல்வேறு உணவு வகைகளின் நன்மைகளை தெரியப்படுத்துங்கள். சில உணவுகளை நாம் ஏன் தேடிச்சென்று உட்கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களுக்கு உணர்த்துங்கள்.


நன்றாக சாப்பிட ஊக்கப்படுத்துங்கள்உங்கள் குழந்தைகளை சரிவிகித உணவு உட்கொள்ள ஊக்கப்படுத்துவது நல்லது. உணவின் சுவை, தரம் மற்றும் அதன் ஊட்டச்சத்து பண்புகள் என அனைத்தையும் எடுத்துக்கூறி அவர்களை நன்றாக சாப்பிட ஊக்கப்படுத்துங்கள். உணவை அவர்கள் சாப்பிடும்போது, அவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை ஏற்படுத்துங்கள்.


ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்கள் கொடுக்கும்போது அது குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். எனவே அவர்கள் ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ்கள் எடுத்துக்கொள்வதை குறைக்கவேண்டும். பாக்கெட் உணவுகள், குளிர் பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அவர்கள் தவிர்க்க வேண்டும்.சாக்லேட்கள், பாட்டில் பானங்கள் எல்லாம் அறவே தவிர்த்துவிடவேண்டும். குழந்தைகள் குப்பை உணவுகளை சாப்பிட அனுமதிக்கக்கூடாது. சர்க்கரை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. குழந்தைகள் அதை சாப்பிட்டால் அவர்கள் அதற்கு அடிமையாகிவிடுவார்கள்


மகிழ்ச்சியான உணவுச்சூழல்குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை உட்கொள்ள நேர்மறையான உணவு நேரம் மற்றும் சூழலை உருவாக்கவேண்டும். குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவேண்டும்.அது உணவு நேரம் மட்டுமல்ல குடும்பத்துடன் சேர்ந்திருக்கும் நேரமும் ஆகும். சுவையான உணவைவிட ஆரோக்கிய உணவுதான் உடலுக்கு நல்லது. இந்த நிலை குடும்பத்தினரை நெருக்கமாக்கும். இது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடையே பிணைப்பை ஏற்படுத்துகிறது.😊


அவர்கள் வாழ்வில் அக்கறை காட்டுங்கள்உங்கள் குழந்தைகளின் தினசரி பள்ளி வாழ்க்கையில் அக்கறை காட்டுங்கள். சாப்பிடும் நேரத்தில், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடும் மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள். எனவே பொறுமையாகவும், நெகிழ்தன்மையுடன் இருக்கவேண்டும்.அவர்களுக்கு அவ்வப்போது விருந்து கொடுங்கள். அவர்களை ஊக்குவியுங்கள், பாராட்டுங்கள்.ஆரோக்கியமான உணவை ஆரோக்கியமற்ற வழியில் வழங்கினாலும், அ


து நல்லதில்லை. எனவே அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.



உணவை நேரத்தை அட்டவணையிடுங்கள்நீங்கள் சாப்பிடும் உணவு நேரத்தை அட்டவனையிடுவது உங்களுக்கு மிகவும் அவசியம். குறிப்பாக உங்கள் உணவை பட்டியலையும் அட்டவணையிடுதல் அவசியம். குறிப்பாக பள்ளிக்கு கொண்டு செல்லும் உணவில் என்ன இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியம். பழங்கள், சீட்ஸ்கள் நட்ஸ்கள், முட்டை, காய்கறிகள், சிக்கன், மட்டன், கீரைகள், பருப்புகள், தானியங்கள், சிறுதானியங்கள் என அந்த உணவு இருக்கவேண்டும்.😊


உணவை முன்னதாகவே திட்டமிடுங்கள்ஒரு வாரம் முழுவதுக்கும் உணவை திட்டமிடுங்கள். இதனால், உங்களுக்கு சரிவிகித உணவு கிட்டும். நேரம் மிகவும் முக்கியம். குறிப்பிட்ட இளைவெளியில் உணவு உட்கொள்ள குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். சரியான நேரத்தில் தூக்கமும் அவசியம்.

No comments:

Post a Comment