Sunday, June 2, 2024

சீந்தில் கொடி - தினம் ஒரு மூலிகை

 *


சீந்தில் கொடி இதய வடிவ இலைகளையும் தக்கையான சாருள்ள தண்டுகளையும் காகிதம் போன்ற புற தோலையும் உடைய ஏழு கொடி இதை அமிர்த வள்ளி சோமவல்லி சாகாமுலே என்றும் அழைப்பார்கள் கொடி வேர் மருத்துவ பயன் உடையது முதிர்ந்த கொடியை நறுக்கி இடித்து நீரில் கரைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் அசையாது சில மணி நேரம் வைத்திருந்து நீரை வடித்துப் பார்க்க அடியில் வெண்ணிறமான மாவு படிந்திருக்கும் மீண்டும் நீர் விட்டு கரைத்து தெளிய வைத்து எடுத்து உலர்த்தி வைக்க பளிச்சிடும் வெண்ணிறமான பொடி இருக்கும் இவற்றை சீந்தில் சர்க்கரை எனப்படும் இது ஒரு கற்ப மருந்தாக கருதப்படுகிறது உணவு கட்டுப்பாட்டுடன் நீண்ட நாள் சாப்பிட இனிஷம் நீங்கும் சீந்தில் சர்க்கரை கல்லீரல் மண்ணீரல் ஆகியவைகளை உரம் பெறச் செய்யும் பிற மருந்துடன் சேர்க்கையுடன் நீரழிவு காமாலை பாண்டு சோகை வீக்கம் கபம் சளி வாந்தி ஆகியவற்றை நீக்கும் முதிர்ந்த கொடிகளை உலர்த்தி பொடித்து காலை மாலை அரை தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடல் உரம் பெறும் பனங்கற்கண்டுடன் சாப்பிட மது மேகத்தால் தோன்றும் கை, கால் அசதி மிகு தாகம் உடல் மெலிவு விரல்களில் சுருக்கென குத்துதல் சரியாகும் நன்றி.

No comments:

Post a Comment