Sunday, June 2, 2024

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை பூகோள அமைப்பு



விவேகானந்தர் நினைவு பாறை Charnockite rock என்ற பாறை வகை.

இந்திய துணைக்கண்டம் அண்டார்டிக்காவிலிருந்து பிரிந்து , நகர்ந்து மோதி இமாலய மலை உருவாகி, இன்னும் மேல்நோக்கி அழுத்தம் இருப்பதால் இமயமலை உயர்ந்து (1–10செ.மீ) வளர்ந்து கொண்டே இருக்கிறதாம். அவ்வாறு பிரிந்த கடைசி முனை கன்னியாகுமரி பாறை.

Gondwanaland கொண்ட்வனநிலங்கள் என்ற பகுதி தற்போதைய இந்தியா, ஆஸ்திரேலியா, தென்அமெரிக்கா, மடகஸ்கர், அண்டார்டிக்கா எல்லாமே இணைந்த ஒரே நிலப்பரப்பு.

60கோடி வருடங்களுக்கு முன்பு இந்த இணைந்த நிலம் கொண்ட்வனநிலம் ; உடைந்து பிரிந்து மெதுவாக நகர ஆரம்பித்தன.


16கோடி வருடங்களுக்கு முன்பு இலங்கை, இந்தியா,மடகஸ்கர், ஆஸ்திரேலியா, கிழக்கு அன்டார்டிகா இந்த குமரி முனையில் உடைந்து பிரிந்து தனித்தனியாக நகர்ந்தன.

12 - 18 கோடி வருடங்களுக்கு முன்பு, இந்தியா குமரி முனையில் உடைந்து தனியாக மேல்நோக்கி நகர்ந்தது. பூகோள நிபுணர்கள் இந்த பிரிந்த கடைசி பாறை முனை தான் தற்போதைய விவேகானந்தர் நினைவு மண்டபம் இருக்கும் பாறையை " the Gondwana junction " சந்திப்பு முனை என்கின்றனர். இந்த முனையில்தான் ஒரு காலத்தில் மடகஸ்கர், இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா இணைந்து இருந்தன.


தற்போதும் இமயமலையின் உயரம் வருடாவருடம் 1–10செ.மீ வரை உயர்ந்து கொண்டே இருக்கிறது !


இந்தப் பாறையில் கன்னியாகுமரி ( குமரன் , குமரி சங்க கால இளைய தெய்வங்களைக் குறிப்பன. பகவன்-பகவதி ஆண்-பெண் தெய்வங்கள்) . குமரி அம்மன் கோயில் சங்க காலத்தைச் சேர்ந்தது. கிபி60–80களில் பெரிபிளஸ் என்ற யாத்திரியர் எழுத்தாளர், குமரியைப் பற்றியும், பிரம்மச்சார்யம் பற்றியும், அம்மனின் வழிபாடுகள் பற்றியும் தெரிவிக்கிறார். புறநானூறு, கிபி3ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரம், மணிமேகலையில் குமரி வருகிறாள். சமஸ்கிருத நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜுர், சம்ஹித வைஷ்ணவ வேதங்களில் குமரி வழிபாட்டுக்குறிப்புகள் உள்ளன.


1892ல் சுவாமி விவேகானந்தரின் குரு, இராமகிருஷ்ண பரமஹம்சர் இக்கோயிலில் தங்கி தியானம் மேற்கொண்டார். இவர் சக்தி வழிபாட்டைச் சேர்ந்தவர்.

இவர் ஒரு உயர்மட்டக்குழு அமைத்து தேவியின் வழிபாடு, தியானம் பரப்ப நாடு முழுவதும் நிதி மற்றும் ஆண், பெண் சேவகர்களை நியமித்தனர். இக்குழுவில் சுவாமி பிரமானந்தா (1863–1922), நிர்மலானந்தா(1863–1938) ஆகியோர் பணிவிடை செய்தனர்.

இவ்வாறு வந்த பெண் பக்தர்களின் மூலம், 1948ல் கன்னியாகுமரியிலும், கேரளாவின் பல இடங்களில் சாரதா மடம் என ஆரம்பிக்கப்பட்டன.(இக்காலங்களில் கன்னியாகுமரி திருவாங்கூர் கேரளா மன்னரிடம் இருந்தது)

குமரி, சிவனை வழிபட்டு தியானம் செய்தாள் என புராணம்.


விவேகானந்தரும் இதே பாறையில் தியானம் செய்து ஞானம் அடைந்தார் என நம்பப் படுகிறது.

1962ல் கன்னியாகுமரியில் சில ஊர்ப்பெரியவர்கள் விவேகானந்தர் 100 வது பிறந்த நாளைக் கொண்டாடும்போது , நினைவு மண்டபம் எழுப்ப முயற்சி செய்தனர். உடனடியாக சென்னையில் இருந்த ராமகிருஷ்ண மிஷன் ஒப்புக்கொண்டு தாங்களே பிரம்மாண்டமாக கட்டுவதாக ஒப்புக் கொண்டனர்.

அதே சமயம் இந்தப் பகுதி கிறிஸ்துவ மக்கள் அதிகமாக வாழும் மற்றும் மீனவர்கள் நிறைந்த பகுதி. மீனவர்கள் ஒரு பெரிய சிலுவையை கரையிலிருந்து மக்களுக்கு தெரியும் வகையில் "புனித சேவியர் பாறை" என உடனடியாக கட்டிவிட்டார்கள். இந்துக்கள் இந்தப் பாறை, பார்வதி, விவேகானந்தர் தியானம் செய்த பாறை, அதனால் இந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என போராட்டம் செய்தனர். தமிழ்நாடு அரசு தலையிட்டு, விசாரணைக்கமிட்டி அமைத்து இந்த பாறை இந்துக்களின் புராண புனித இடம் என தீர்ப்பாகி, இரவோடு இரவாக சிலுவை மற்றும் சிறிய வழிபாடு தலம் நீக்கப்பட்டது.

1963ல் முதலமைச்சராக இருந்த திரு.பக்தவச்சலம், இது சுவாமி விவேகானந்தர் நினைவு பாறையே, ஆனால் சிறியதாக ஒரு நினைவுச்சின்னம் வைக்கக் கேட்டுக் கொண்டு அனுமதி அளித்தார்.

விவேகானந்தா மடம் ஒரு கமிட்டியை நினைவு மண்டபம் கட்ட உருவாக்கி அதன் தலைவராக ஆர்எஸ்எஸ் ஏக்நாத் ராணடேவை தலைவராக நியமித்தது.

அப்போதைய மத்திய அமைச்சர் ஹுமாயூன் கபீர் பாறையில் கட்டடம் கட்டுவது இயற்கைக்கு புறம்பானது என எதிர்ப்பு தெரிவித்தார்.

ரணடே விடவில்லை. அப்போதைய பிரதம மந்திரி ஸ்ரி லால்பகதூர் சாஸ்திரியின் ஆலோசனைப்படி, 323 எம்.பிக்களின் ஒப்பந்தக் கையெழுத்து வாங்கி பிரதமரிடம் சமர்ப்பித்தார்.

ஆக தமிழ்நாடு அரசு விவேகானந்தர் நினைவு மண்டபம் 130 ×60 அடி பரப்பளவில் கட்ட கமிட்டிக்கு அனுமதி அளித்தது.





தற்போது வடிவமைப்பு எந்த விதத்தில் இருக்க வேண்டும் ?

தென்னிந்திய திராவிட கோபுர அமைப்பு நுழைவு வாசலுக்கும் ராமகிருஷ்ண மண்டபத்தின் அமைப்பு பிரதான விவேகானந்த பேளூர் மேற்கு வங்காளம் மட மண்டபத்துக்கும் கொடுக்கப்பட்டது.


தனுமலயன் , நாகர்கோயில் எஸ்.டி. இந்து காலேஜ் மாணவர் மெழுகில் வடிவமைத்தார். கமிட்டி இதையே ஒப்புக் கொண்டது.

விவேகானந்தர் முழு உருவ சிலை; நாராயணராவ் சோனாவடேகர், சிற்பி மற்றும் ப்ரபசர் ஜெ.ஜெ. ஆர்ட்ஸ் ஸ்கூல்- மும்பை என்பவரால் செய்யப்பட்டது.


:அடுத்து திருவள்ளுவர் சிலை வந்ததும் ராணடேயின் முன் ஏற்பாடே. பக்கத்திலுள்ள பாறையில் ஏசுநாதர் வந்து விடுவார் என அப்போதைய அதிமுக, திமுக உதவியோடு நிறுவ ஏற்பாடு செய்து தொடக்கி வைத்தார். கலைஞர் எப்போதும் ஆதாயம் தேடுபவர். திருவள்ளுவருக்கு வள்ளுவனல்லாத உருவம் சர்மாவால் கொடுத்தவரல்லவா?


முருகனுக்கு ஸ்ரிதேவி, தேவானிக்கு ஜெயலலிதா, சிவனுக்கு சிவாஜிகணேசன், கிருஷ்ணருக்கு என்டிஆர், என்பது போல வள்ளுவருக்கு எம்ஜிஆர் முகங்கள் நமது சினிமா மோக பாரம்பரியம்.


2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் .( வேணுகோபால சர்மா + கருணாநிதி).

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். - திருவள்ளுவர்.

அடுத்த படம் 500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவரின் குறள்களைப் போல கன்னடத்தில் பாடிய சர்வக்ஞா என்ற கவிஞரின் உருவம்.

No comments:

Post a Comment