Sunday, June 9, 2024

தான்றிக்காய் - தினம் ஒரு மூலிகை



 *தான்றிக்காய்* செரிமானத்தை தூண்டும் அறிய மருந்தாக பயன்படுகிறது வைட்டமின் F அதிகம் இருப்பதால் இருமல் ஆஸ்துமாவை குணப்படுத்தும் திறன் பெற்றது தான்றிக்காய் தான்றிக்காயை சுட்டு மேல் தோலை பொடித்து அதன் எடைக்கு சமமாய் சர்க்கரை கலந்து தினசரி காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர பல்வலி ஈறு நோய்கள் குணமாகும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க வல்லது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி சுத்தப்படுத்தும் வெந்நீர் கொண்டு அரைத்து உங்களின் மீது தடவ விரைவில் ஆறும் கொட்டை நீக்கி கருகாமல் வறுத்து பொடித்து ஒரு கிராம் அளவு சர்க்கரை கலந்து காலை மாலை கொடுக்க மலச்சிக்கல் குடல் பலமின்மை காய்ச்சல் பித்த வழி ரத்தமூலம் சீதபேதி ஆகியவை தீரும் தான்றி பொடி 3 கிராம் உடன் சமன் சர்க்கரை வெந்நீரில் கலந்து காலை மாலை சாப்பிட பித்த நோய்கள் வாயில் நீர் ஒழுகுதல் கண் பார்வை தெளிவு பெறும் அதிமதுரம் திப்பிலி தான்றிக்காய் சேர்த்து கசாயம் செய்து 50 மில்லி வரை குடிக்க இருமல் செரிமான பிரச்சனை குணமாகும் நன்றி.

No comments:

Post a Comment