Saturday, June 1, 2024

சுவாமி விவேகானந்தர் பாறையை நிறுவியவர் யார்?

RSS பிரச்சாரகர் ஏக்நாத் ராமகிருஷ்ண ரானடே என்பவரால் Vivekananda Rock Memorial Organising Committee ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் கட்டப்பட்டது.

திரு ஏக்நாத் ரானடே அவர்கள் ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர். அவருக்கு கொடுக்கப்பட்ட கடினமான அசைன்மென்ட், கன்யாகுமரியில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தில், மூன்று நாட்கள் மாதவம் இருந்த ஸ்வாமி விவேகானந்தர், அந்த புனித பாறையில் அவருக்கு ஒரு அழகிய மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது. பல எதிர்ப்புகள். அனைத்தையும் சர்வ சகஜமாக எதிர்கொண்டு, நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு, அணைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தலைவர்களை உணரவைத்து, விவேகானந்த கேந்த்ரா என்ற அமைப்பை உருவாக்கி, அந்த அழகிய முக்கடல்கள் சங்கமிக்கும் இடத்தில், விவேகானந்தர் மண்டபத்தை ஏற்படுத்தினார் ரானடே . மண்டபம் கட்டப்படும் சமயத்தில் எடுத்த அறிய புகைப்படம்.


இரண்டாவதாக இருப்பவர் திரு ரானடே . அவர் அருகில் முதலாவதாக நிற்பவர் அறிமுகம் தேவையில்லை.

No comments:

Post a Comment