Tuesday, June 11, 2024

திருநீற்றுப் பச்சிலை - தினம் ஒரு மூலிகை


*திருநீற்றுப் பச்சிலை* செறிந்த மனம் உடைய இலைகளையும் வெளியே கரும் சிவப்பு மலர் கொத்தினையும் உடைய சிறு செடி இனம் இலை விதை மருத்துவ பயன் உடையது இதை உருத்திர சடை சப்ஜா என்றும் அழைப்பார்கள் இலைகளை அரைத்து பூசினால் கட்டிகள் கரையும் இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி இதய நடுக்கம் தூக்கம் இன்மை மற்றும் மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும் இலை சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு வலி இருமல் வயிற்று வாயு பிரச்சனைகள் சரியாகும் காது வலி காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு இலை சாறு சில சொட்டுக்கள் விட்டால் நிவாரணம் கிடைக்கும் முகப்பருவினை போக்க இலைச்சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்து பூசினால் பலன் கிடைக்கும் கர்ப்பிணி பெண்கள் இளைச்சாறு சாப்பிட்டால் பிரசவத்தின் போது ஏற்படும் கடுமையான வலிகள் குறையும் கோடையில் வயிற்று வலி கண் எரிச்சல் சிறுநீர் அடைப்பு சிறுநீர் எரிச்சல் போன்றவற்றிற்கு இதன் விதைகள் நல்ல தீர்வைத் தரும் விதையை நீரில் ஊற வைத்து பிறகு வெதுவெதுப்பான நீர் சேர்த்து பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் உஷ்ணம் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும் நன்றி

No comments:

Post a Comment