Saturday, June 8, 2024

வீட்டில் உள்ள மிக்ஸி புதிது போல பாதுகாக்க

சில சூப்பரான டிப்ஸ் ....

மிக்ஸியை புதிது போல் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்!

இன்றைய காலத்தில் சமையல் வேலைகள் அனைத்தையும் எளிதாக செய்து முடிப்பதற்கு நவீன இயந்திரங்கள் மிகவும் உதவியாக உள்ளது. அதன் வகையில் மிக்ஸியானது ஒரு பொருளை அரைப்பதற்கு மிகவும் உதவியாக உள்

ளது. சமையலுக்கு உதவியாக உள்ள மிக்ஸியை எப்படி பராமரித்து புதிது போல் வைத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.

மிக்ஸியை பயன்படுத்தும் போது மின்சாரம் லோ பவராக இருந்தால் மிக்ஸியை பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் மிக்ஸியில் உள்ள மோட்டார் பழுதடைந்துவிடும்.

மிக்ஸியின் பிளேடுகள் கூர்மையாக இல்லாமல் மழுங்கி விட்டால் ஒரு கை கல் உப்பை எடுத்து மிக்ஸியில் போட்டு சில நிமிடங்கள் அரைத்தால் பிளேடுகள் கூர்மையாகிவிடும். மிக்ஸி பிளேடுகளை சாணம் பிடிக்கக் கூடாது.

நாம் சமையல் செய்யும் போது ஜாரில் போட்டு அரைத்து முடித்தவுடனே தண்ணீரை ஊற்றி கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரங்களை கழுவும் போது சுத்தம் செய்யலாம் என்று பாத்திரத்தோடு சேர்த்துப் போடக்கூடாது.

மேலும், பொருட்களை அரைக்கும் போது பிளேடு சுலபமாக சுற்றக்கூடிய அளவுக்கு தண்ணீரை விட்டு அரைக்க வேண்டும். இல்லையென்றால் பிளேடு உடைந்துவிடும் மற்றும் மிக்ஸி மோட்டார் அதிகமாக சூடாகி பழுதாகிவிடும்.

மாவு கெட்டியாக வேண்டும் என்று கெட்டியாக அரைத்தால் மிக்ஸி எளிதில் பழுதாகிவிடும். மிக்ஸி ஜாரின் அடிப்பகுதி பழுதாகி விட்டால் அல்லது அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தால் உடனே ஜாரினை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரில் இறங்கி மிக்ஸியில் பழுது ஏற்பட்டுவிடும்.

மேலும், மிக்ஸியில் சூடான பொருட்களை அரைக்கக் கூடாது. மிக்ஸி ஓடும் போது மூடியைக் கையினால் அழுத்திக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதை கவனித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும். இவ்வாறு மிக்ஸியை பயன்படுத்தி வந்தால் நீண்ட நாட்களுக்கு புதிது போல் வைத்துக் கொள்ளலாம்.

மிக்ஸியில் வெந்தயம், ஏலக்காய் போன்றவற்றை அரைத்தால், அவற்றின் வாசனை போக்க, அதன் பிறகு, மிக்ஸியில் ஒரு கைப்பிடி வேர்க்கடலை போட்டு அரைத்து எடுத்தால், வாசனை முற்றிலும் நீங்கிவிடும்.

 மிக்ஸியை சுத்தம் செய்யும் போது, டூத்பிரஷ்ஷில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் சுத்தமாக இருக்கும்.

No comments:

Post a Comment