Saturday, June 1, 2024

உடல் சூட்டை குறைக்க உதவும் இயற்கை வழி முறைகள்

 *.*

உடல் சூடு இருந்தால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் இருக்கிறது. மலச்சிக்கல், வெள்ளைப்படுதல், கண் சிவப்பாகுதல் எனப் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு நம் உடல் சூடும் ஒரு காரணம். உடல் சூட்டை குறைக்க முடியுமா? என்னென்ன வழிகள் உள்ளன? என்று பார்க்கலாம்.


உடலின் வெப்பநிலையைக் குறைக்க தண்ணீர் குடிப்பது உதவும். குறைந்தது 2-3 லிட்டர் அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. குழந்தைகளுக்கு அவரவரின் வயதுக்கு ஏற்ப ¾ அல்லது 1 அல்லது 1 ½ லிட்டர் அள

வு தண்ணீர் கொடுக்கலாம். ஒரு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி, அதில் கால், பாதம் நனையும்படி 15 நிமிடங்கள் வைத்திருந்தாலும் ஓரளவுக்கு வெப்பநிலை குறையும்.


தாதுக்கள், விட்டமின் நிறைந்த இளநீரைக் குடித்து வந்தாலும் வெப்பநிலை குறையும்.


நல்ல பலன் கிடைக்கும்.


புதினா டீ போட்டுக் குடிப்பது. புதினா, எலுமிச்சை சாறு கலந்து ஜூஸோ டீயோ போட்டுக் குடிப்பது நல்லது.


வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி, முலாம் பழம், நுங்கு ஆகியவை உடலைக் குளிர்ச்சியாக்கும்.


புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌ சௌ, முள்ளங்கி, கேரட் ஆகியவை உடலுக்குக் குளிர்ச்சி தரும்.


மாதுளை ஜூஸ் மற்றும் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு நீங்கி குளிர்ச்சியாகும்.


உடலின் வெப்பம், வெளி காரணங்களால் ஏற்படும் சூடு ஆகியவற்றைப் போக்க விட்டமின் சி நிறைந்த உணவுகள் உதவும். அவை, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, கமலா 


கற்றாழையை சுத்தப்படுத்தி, அதன் சதைப் பகுதியை நன்கு கழுவ வேண்டும். பனை வெல்லம் கலந்து அரைத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சியாகும். வெறும் வயிற்றில் குடிப்பது மிக்க நல்லது.


தினமும் 2 டம்ளர் நீர்மோரை காலை  அல்லது மாலை  குடித்து வந்தால் உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும். பெரியவர்கள், குழந்தைகளுக்கு ஏற்றது.


2 ஸ்பூன் வெந்தயத்தை முதல்நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயம் அந்தத் தண்ணீரையும் சேர்த்துக் குடிக்கலாம். விருப்பப்பட்டால் சிறிது மோருடன் கலந்து குடிக்கலாம். பெரியவர்கள் சாப்பிடலாம்.


தினமும் நீராகாரம், மோர், பழ ரசங்கள், இளநீர் சாப்பிடலாம். இதனாலும் உடல் குளிர்ச்சியாகும். அனைவருக்கும் ஏற்றது.


சப்ஜா விதைகளைத் தண்ணீரில் ஊற வைத்து, அதை இளநீரில் அல்லது பாலில் அல்லது பழச்சாறுகளில் அல்லது அப்படியே வெறுமனே குடிக்கலாம். உடலின் வெப்பம் தணியும். அனைவருக்கும் ஏற்றது. 


புழுங்கல் அரிசியுடன் சிறிது வெந்தயம் கலந்து குழைய வேகவிடவும். அதில் கெட்டியான தேங்காய்ப் பால் ஊற்றி கலக்க வேண்டும். 2 நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும். எண்ணெய் தேய்த்து குளித்த அன்று காலை உணவாக சாப்பிடுவது மிக மிக நல்லது. உடல் சூடு காணாமல் போய்விடும். இதற்கு புதினா துவையல் தொட்டு சாப்பிடலாம். அனைவருக்கும் ஏற்றது.


பெண்கள் செவ்வாய், வெள்ளி. ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் சூடு வரவே வராது. பெரியவர்கள் அவசியம் செய்ய வேண்டும்.


இரவு பொழுதுடன் தூங்க சென்றுவிட்டால் உடல் சூடு அதிகரிக்காது. அதுவும் எண்ணெய் குளியல் குளித்த அன்று, கட்டாயமாக இரவில் சீக்கிரம் தூங்க சென்று விடுங்கள்.

No comments:

Post a Comment