Saturday, June 8, 2024

செய்தித் துளிகள் - 08.06.2024(சனிக்கிழமை)


⛑️⛑️சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாளான 10.06.2024 அன்று இனிப்புப் பொங்கல் வழங்குதல் - சமூக நல ஆணையரின் கடிதம் வெளியீடு.

(ஜுன் 3 கலைஞர் 101 வது பிறந்த நாளுக்கு வழங்க வேண்டிய சர்க்கரைப் பொங்கல் கோடை விடுமுறை காரணமாக ஜுன் 10 வழங்கப்படுகிறது)

⛑️⛑️பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ம் தேதி வெளியீடு: 2.48 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

⛑️⛑️பள்ளிகள் திறக்கும் முதல்நாளே நலத்திட்ட பொருட்கள்

வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

⛑️⛑️கேரளாவில் உள்ள பள்ளிகளின் வேலைநாட்களை அதிகரித்து மாநில அரசு உத்தரவு

⛑️⛑️முன்னதாக நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த நிலையில், தற்போது தேர்வு முடிவிலும் முறைகேடு!ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்கள் 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது

மறுபுறம் மாணவர்கள் பலரும் இந்த தேர்வால் தற்கொலை செய்து வரும் சூழலில், மாணவர்களின் குரல்களை அரசு ஏன் புறக்கணிக்கிறது?

இந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை இல்லையா?

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி

⛑️⛑️நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை கோரி வழக்கு

👉நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்; கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த நீட் பயிற்சி மையத்தின் சார்பில் வழக்கு

நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை நீக்கக் கோரிக்கை; கருணை மதிப்பெண்களை நீக்கிவிட்டு புதிய தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தல்.                                            ⛑️⛑️அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய முன்வர வேண்டும். மருத்துவ கல்வி தரத்தை அதிகரித்து, மருத்துவக் கல்வி வணிகமாவதை தடுக்கவே நீட் கொண்டு வந்ததாக கூறினர்.குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

-பாமக நிறுவனர் ராமதாஸ்

⛑️⛑️சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை

-முதல்வர் ஸ்டாலின்

⛑️⛑️சட்டப்படிப்பு சேர்க்கை 2024-25 கல்வியாண்டுக்கான கட் - ஆப் மதிப்பெண் வெளியீடு.

⛑️⛑️சா்ச்சைகளுக்கு வித்திட்ட ‘நீட்’ தோ்வு முடிவுகள்! - முரண்பட்ட மதிப்பெண்களால் தோ்வா்கள் அதிருப்தி.!

⛑️⛑️பள்ளிக்கல்வி துறையின் ஒருங்கிணைந்த வாட்ஸ்-அப் தளம்: 1.02 கோடி பெற்றோர் செல்போன் எண்கள் சரிபார்ப்பு.

⛑️⛑️அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளில் 1,894 மாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வு.

⛑️⛑️அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை & பண்பாட்டுத் துறை சார்பில் பகுதி நேரமாக கலைகள் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம்.

⛑️⛑️தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க 13.06.2024 வரை காலநீட்டிப்பு.

⛑️⛑️முதுகலை ஆசிரியர்களுக்கு பணிநிரவரல் கலந்தாய்வு நடத்துதல் - Director Proceedings வெளியீடு.

⛑️⛑️இளநிலை உதவியாளர் / தட்டச்சர்களுக்கு உதவியாளராகப் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது - Panel Director Proceedings வெளியீடு.

⛑️⛑️2023 - 24 ஆம் கல்வியாண்டில் 01.08.2023 நிலவரப்படி (11, 12-ம் வகுப்புகளுக்கு) ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரப்படி முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்து (Staff fixation) முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அறிக்கை பெறப்பட்டு, ஆசிரியருடன் உபரி (Surplus with Person) என்று கண்டறியப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு 10.06.2024 பிற்பகல் 2.00 மணிக்கு EMIS இணையதள வாயிலாக நடைபெறும் என சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

⛑️⛑️ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு (BRTE) பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

👉725 BRTE VACANCY DETAILS - DISTRICT WISE & BLOCK WISE - மாவட்டவாரியாக நிரப்பப்பட வேண்டிய ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிடங்கள் எண்ணிக்கை விவரம் வெளியீடு.

👉ஆசிரியர் பயிற்றுநர்கள்(BRTE) பொது மாறுதல் கலந்தாய்வு (திருத்தி அமைக்கப்பட்ட செயல்முறைகள்) அறிவிப்பு மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

மாநில பணி மூப்பு முன்னுரிமை பட்டியல் படி மாநித்திற்குள் மாறுதல்_

 14-06-2024

_மற்றும்_

15-06-2024

⛑️⛑️10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு - DGE செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடித்த மாணவர்கள் தமிழகத்தில் ஓராண்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

⛑️⛑️ECO CLUB - MERI LIFE வலைதளத்தில் தங்கள் பள்ளியை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் வெளியீடு.

⛑️⛑️நமது பள்ளியின் சரியான LATITUDE மற்றும் LONGITUDE VALUE புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் வெளியீடு.                                                        ⛑️⛑️தமிழ்நாட்டில் ஜூன் 17ஆம் தேதி பக்ரித் பண்டிகை

தலைமை காஜி அறிவிப்பு

⛑️⛑️கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்படும்

57 தனியார் பள்ளிகளில்

மாணவர்களை சேர்க்க வேண்டாம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

⛑️⛑️இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்து பழையபடி 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த ஆவன செய்ய வேண்டும்  என கோரிக்கை

⛑️⛑️நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதாக வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. நேர்மையான முறையில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது

தேசிய தேர்வு முகமை

⛑️⛑️நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

அதன்படி மாவட்டத்தில் உள்ள  பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு

இதனை ஈடு செய்யும் விதமாக வருகிற ஜூன் 29-ம் தேதி வேளை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது

⛑️⛑️டி20 உலகக் கோப்பை - அமெரிக்கா வெற்றி:

டி20 உலகக் கோப்பை லீக் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் அமெரிக்கா அணி வெற்றி 

அமெரிக்கா அணி போட்டி சமன் செய்த நிலையில் போட்டி சூப்பர் ஓவர் முறைக்கு தள்ளப்பட்டது, முதலில் களமிறங்கிய அமெரிக்கா அணி 18 ரன்கள் சேர்ப்பு

⛑️⛑️ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை;  வட்டி விகிதம் 6.50% ஆக தொடரும் - ஆர்.பி.ஐ

⛑️⛑️டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து,3வது முறையாக ஆட்சியமைக்க உரிமை கோரினார் மோடி.

தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்துடன் குடியரசுத் தலைவரை சந்தித்தார்.

⛑️⛑️தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து,முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை பிரதமர் எல்.கே அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்தார். 

⛑️⛑️பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமின்.

பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட நிலையில் ஒரு வழக்கில் இருந்து மட்டும் ஜாமின் வழங்கி திருச்சி மகிலா நீதிமன்றம் உத்தரவு.

⛑️⛑️இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு அதிமுக மற்றும் எனது  சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

⛑️⛑️முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

⛑️⛑️தேசத்தின் வளர்ச்சியில் ஒருபோதும் சமரசம் இல்லை ; 

தேசமே முதன்மையானது.! 

கூட்டணி கட்சி கூட்டத்தில் மோடி பேச்சு

⛑️⛑️அதிமுக எம்.ஜி.ஆரால், தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். தொண்டர்களுக்கான இயக்கமாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர், வரலாற்று சிறப்புமிக்க இயக்கமாக, அதிமுகவை கட்டிக் காத்து வந்தனர். 

இன்றைய சூழ்நிலையில், தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ? அதுபோல் நடப்பது தான் நல்லது. அதிமுக தொண்டர்கள் அனைவரும், ஒன்றாக இணைய வேண்டும் என்று, தொண்டர்கள் நினைக்கின்றனர். 

நான் டெல்லி செல்கிறேன்.

 நான் டெல்லியில் இருந்து வரும் போது உங்களிடம் பேசுகிறேன்

ஓ.பன்னீர்செல்வம்

⛑️⛑️தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டம் டெல்லியில் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்தது. எனவே கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்கிறேன்.  

டி.டி.வி.தினகரன்

⛑️⛑️நாட்டின் பிரதமராக மோடியை தேர்வு செய்ய நிதிஷ்குமார் ஆதரவு.5 ஆண்டுகள் எனது ஆதரவு உண்டு.

பீகாரில் நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றார்.

⛑️⛑️சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா பெற்றுள்ளது

உலக அரங்கில் இந்தியாவின் புகழை நிலை நாட்டியவர்.

இதுதான் மோடியின் சாதனை

சந்திரபாபு நாயுடு                                ⛑️⛑️மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பயனாளர்கள் சேர்ப்பதற்கு பணிகள் நடைபெறுகிறது..!

👉வருகின்ற 20ஆம் தேதி விண்ணப்பம் வழங்கப்படலாம் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஜூலை 1ஆம் தேதிக்குள் வழங்கிவிட வேண்டும்.

⛑️⛑️சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு 

ஒரு கிராம் தங்கம் ரூ.6,840க்கும், சவரன் ரூ.54,720க்கும் விற்பனை

No comments:

Post a Comment