Tuesday, June 11, 2024

செய்தித் துளிகள் - 11.06.2024(செவ்வாய்க்கிழமை)

📘📕பள்ளிக் கல்வியின் முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு. மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

📘📕12.06.2024(புதன்கிழமை) காலை 11.00 மணிக்கு குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி மேற்கொள்ள தொழிலாளர் துறை ஆணையர் அ

னைத்து துறை தலைவர்களுக்கும் கடிதம்.

📘📕தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட புதிய whatsapp சேனல் தொடக்கம்.

📘📕‘ஹை-டெக் லேப்' பயிற்றுவிப்பாளர் பணி - அமைச்சர் அன்பில் மகேஸிடம் கணினி பட்டதாரிகள் முறையீடு.

(நாளிதழ் செய்தி)

📘📕JEE பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 48,248 மாணவர்கள் தேர்ச்சி.

📘📕பதவி உயர்வுகளற்ற பொது மாறுதலால் கேள்விக்குறியாகும் குழந்தைகளின் கல்விக் கனவு.!

📘📕மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு பாடம்: சென்னை மாநகராட்சி முயற்சி                                                                            📘📕பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடவேளை அறிமுகம். கல்வி சாரா செயல்பாடுகளுக்கு வாரத்திற்கு 16 பாட வேலைகள் ஒதுக்கீடு செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

📘📕அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பகுதி நேர கலை ஆசிரியர்கள் பணிக்கு விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

📘📕10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் இறுதி வாய்ப்பை அளித்துள்ளது

📘📕நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 25 பேர் லண்டன் பயணம்

📘📕அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: பொதுப்பிரிவினர் கலந்தாய்வு நேற்று  தொடங்கியது.

📘📕தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

📘📕திறந்தநிலை, இணையவழி படிப்புகளை பயிற்றுவிக்க விரும்பும் உயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவதற்கான கால அவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

📘📕ஆசிரியர் தகுதித்  

தேர்வு வழக்கை விரைவாக முடித்து தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்-கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு கோரிக்கை.

(நாளிதழ் செய்தி)

📘📕நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

📘📕உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2024 முதல் 14.06.2024 வரை பள்ளி வேலை நாளன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி merilife வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

📘📕40 வயதிற்கு மேல் லைசென்ஸ் புதுப்பிக்கும்போது மருத்துவரின் உடற் தகுதி சான்று பெற வேண்டும்.இனி போக்குவரத்து துறையின் அங்கீகாரம் பெற்ற மருத்துவரே இந்த சான்றுகளை அளிக்க முடியும்.

உண்மையான மருத்துவர்கள் ‘சாரதி ஆஃப்பில்’ பதிவு செய்ய போக்குவரத்து துறை ஆணை.

📘📕விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10 ம் தேதி இடைத்தேர்தல்.

-தேர்தல் ஆணையம்

📘📕மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு நிதியாக ரூ.1.39 லட்சம் கோடியை விடுவித்தது மத்திய அரசு

👉உ.பி.க்கு ரூ.25,069 கோடி

👉பீகாருக்கு ரூ.14,056 கோடி                                    👉ம.பி.க்கு ரூ.10,970 கோடி விடுவிப்பு

👉தமிழ்நாட்டுக்கு ரூ.5700 கோடி ஒதுக்கீடு.

📘📕திமுக மாநிலங்களவைக் குழு தலைவராக  திருச்சி சிவா மற்றும் துணைத் தலைவராக சண்முகம் நியமனம்.

📘📕நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை சேர்த்து குழு தலைவராக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி நியமனம் 

-முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவிப்பு

📘📕ஜூன் 12ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற உள்ளது

துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நாட்கள் குறித்து முடிவு செய்யப்படும்

ஜூன் 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது

📘📕விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, விழுப்புரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறை 

"விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது"

ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு தடை இல்லை 

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

📘📕தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான்" 

அதிமுகவினர் ஒன்றிணையாவிட்டால் எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது"

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்                                                          📘📕புதிதாக சுமார் 2 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடக்கம் - உணவு பொருள் வழங்கல் துறை

மக்களவை தேர்தல் அறிவித்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்குவது கடந்த மார்ச்சில்  நிறுத்தி வைக்கப்பட்டது

📘📕புத்தாக்கத் தொழில் திட்டத்தால் பட்டியலின – பழங்குடியின இளைஞர்கள் இந்தியாவிலேயே முதல் முதலாக தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை                                                                    📘📕ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றம் செய்வது குறித்த குழு, பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கவில்லை: தமிழ்நாடு அரசு விளக்கம்.

📘📕திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை

மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8 ஆம் நாள்) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற 

“கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்ட த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சீர்மிகு விழா தமிழ்நாட்டு வெற்றிக்கு கழகத்தை வழிநடத்திச் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், அவர்களுக்குப் பாராட்டு விழா என “முப்பெரும் விழா” ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14 ஆம் தேதிக்கு பதிலாக "ஜூன்-15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில்” நடைபெறுகிறது.

மாண்புமிகு கழகத்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.

அனைத்துக் கழக மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

“அண்ணா அறிவாலயம்”

சென்னை-18.

துரைமுருகன்,

பொதுச்செயலாளர்,

தி.மு.க.

📘📕📘📕📘📕📘📕📘📕

🌹🌹மண்பானை குடிநீரின் நன்மைகள்!


👉இன்றைய காலச்சூழலில், சுத்தமான குடிநீர் கிடைப்பது அரிதாகிப் போனதால், குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். ஆனால், அந்த நீரும் எந்தளவு சுத்தமானது என்பது நமக்கு தெரியாது. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு நீரை சுத்தப்படுத்தி விடுகிறது. எனவே உலகத்திலேயே மிகச்சிறந்த வாட்டர் பில்டர் மண்பானைதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

👉களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாதுக்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கும். இயற்கையாகவே பானைகளில் உள்ள நீர் குளிர்ச்சியடைகிறது. இதனால், தண்ணீரின் சுவையும் அதிகரிக்கிறது. எனவேதான். கோடைக்காலத்தில் பானை நீரை அருந்தினால் அதன் குளிர்ச்சித் தன்மை

இதமான உணர்வை தருகிறது.

👉புதிதாக மண்பாண்டம் வாங்கும்போது, முதன்முதலில் ஊற்றும் நீரை குடிக்கக் கூடாது. ஒரு வாரம் தண்ணீர் மாற்றி மாற்றி ஊற்றிய பின்னர், தினசரி குடிக்க ஆரம்பிக்கலாம்.

👉கோடைக்காலத்தில் வெயில் காரணமாக சில நோய்கள் தொற்றிக் கொள்ளும். இதைத்தடுக்க மண் பானை நீர் சிறந்த இயற்கை மருந்து. கனிமச் சத்துகள் நிறைந்த பானை நீர் உடலுக்கு பல நோய் எதிர்ப்பு சக்திகளை அளிப்பது மட்டுமன்றி தீராத தாகத்தையும் ஒரு கிளாஸ் நீரில் தீர்த்துவிடும்.

👉மண் பானையில் நீர் அருந்துவதால் மெட்டபாலிசத்தை தூண்டி அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதில் இருக்கும் மினரல்கள் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை அருந்தும் போது சில பின்விளைவுகள் ஏற்படும். மண் பானை நீர் எந்த பக்கவிளைவுகளுமற்றது. குறிப்பாக சளி, இருமல், தொண்டை வறட்சி, ஆஸ்துமா, தொண்டை புண் போன்ற பிரச்னைகளுக்கு பானை நீர் சிறந்த தீர்வு தரும்.

👉வீட்டில் மணல் பரப்பி அதன் மேல் பானை வைத்து குடிநீரை ஊற்றி வைத்துக் குடியுங்கள். அடிக்கடி மணல் ஈரப்பதத்துடன் இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அப்போதுதான் நீர் குளிர்ச்சியாக இருக்கும். கோடை வெப்பத்திற்கு இதமாக இருக்கும்.

No comments:

Post a Comment