Tuesday, June 4, 2024

சீரகம்-தினம் ஒரு மூலிகை



* *சீரகம்*. எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துன்ன விக்களும் விட்டுப் போகுமே விடாவிடில் நான் தேரனும் அல்லவே இது சித்தர் பாடல் அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு மனப்பொருள் சீரகம் குணம் வயிற்று வாய்வு அகற்றுதல் செரிமானம் மிகுதல் உடல் சூடு மிகுத்தல் சிறுநீர் பெருக்குதல் திசுக்களை இறுக்க செய்தல் மாதவிடாய் தூண்டுதல் ஆகிய குணம் உடையது சீராகத்தை பொடித்து ஒரு கிராம் அளவாக தேன் அல்லது பாலில் காலை மாலை சாப்பிட்டு வர பித்தம் வாயு உதிரச் சிக்கல் சீத கழிச்சல் சரியா கழிச்சல் தீரும் தேவையான அளவு தூய்மைப்படுத்தப்பட்ட சீரகத்தை எலுமிச்சம் சாறு இஞ்சி சாறு நெல்லிக்காய் சாறு ஆகியவற்றை ஒவ்வொன்றிலும் மும்மூன்று முறை தடவை ஊற வைத்து உலர்த்தி பொடித்து அரை தேக்கரண்டி காலை மாலை சாப்பிட்டு வர தெரியாமை சுவையின்மை பித்த மயக்கம் கண் எரிச்சல் வயிற்று வலி மூலக்கொதிப்பு சீத கழிச்சல் உடல் வெப்பம் ஆகியவை தீரும் சீரகத்தை அரைத்து பற்று போட மார்பக வீக்கம் விரை வீக்கம் ஆகியவை குறையும் எரிச்சல் வலியுள்ள இடங்களில் தடவ அவை தீரும் சீரகப் பொடி அரை தேக்கரண்டி வெள்ளத்துடன் கொடுக்க விக்கல் தீரும் நன்றி

No comments:

Post a Comment