Saturday, June 1, 2024

சாதாரண மனிதனுக்கும் சாதனையாளனுக்கும்

 *சாதாரண மனிதனுக்கும் சாதனையாளனுக்கும் இடையே உள்ள 13 வித்தியாசங்கள்!*

கடைக்கோடியில் பிறந்த சாதாரண மனிதன் சாதனையாளனாக மாற வேண்டும் என்றால், மனநிலையும் சிந்தனையும் சரியான திசையில் செல்ல வேண்டும். இல்லையெனில் வெற்றி என்ற இன்பக்கனி எட்டாக்கனி தான். இதன்படி சாதாரண மனிதனுக்கும் சாதனையாளனுக்கும் இடையே இருக்கும் 13 வித்தியாசங்களை எடுத்துக்காட்டுகிறது இந்தப்

பதிவு.


1. ஒவ்வொரு சூழலிலும் எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என நொந்து கொள்வார்கள் சாதாரண மனிதர்கள். ஆனால், சாதனையாளர்கள் தனக்கு நடப்பவை அனைத்திற்கும் நானே பொறுப்பு என அடுத்தது என்ன என்று பயணிப்பார்கள்.


2. பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை மட்டுமே சாதாரண மனிதனுக்குச் சொந்தம்; சாதனையாளன் பணத்தைச் சம்பாதிப்பதில் கவனமுடன் இருப்பார்கள்.


3. சாதாரண மனிதர்கள் குறுகிய எல்லைகளுடன், சிறிய அளவில் சிந்தனை செய்வார்கள். ஆசை மற்றும் நம்பிக்கை ஆகிய இரண்டு மட்டுமே இவர்களுக்கு இருக்கும். சாதனையாளர்கள் பெரிய கனவுகளுடன் பெரிதாகச் சிந்தித்து, அதற்கான திட்டமிடலைக் கொண்டு களத்தில் இறங்குவார்கள்.


4. சாதாரண மனிதர்கள் தடைகளைக் கண்டு அஞ்சி செயலற்று கிடப்பார்கள். சாதனையாளர்களோ வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி, முன்னேறுவார்கள்.


5. சராசரி மனிதர்கள் எதிர்மறை சிந்தனை கொண்ட மனிதர்களுடன் சேரும் போது, நேர்மறை சிந்தனை கொண்ட மனிதர்களுடன் நெருங்கிப் பழகுவார்கள் சாதனையாளர்கள்.


6. எனக்கு அனைத்துமே தெரியும் என்ற மனநிலையில் சாதாரண மனிதர்கள் இருக்க, எந்தச் சூழ்நிலையிலும் கற்று கொள்ளத் தயாராக இருப்பவர்கள் தான் சாதனையாளர்கள்.


7. சாதனையாளர்களையும், பணக்காரர்களையும் பார்த்து பொறாமைப்படும் சாதாரண மனிதர்களுக்கு மத்தியில், அவர்களை ரோல் மாடலாக நினைப்பவர்கள் தான் சாதனையாளர்கள்.


8. சாதாரண மனிதர்களுக்கு தங்களின் திறமையையும், மதிப்பையும் எங்கு வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியாது. ஆனால், தங்களை எங்கு முன்னிலைப்படுத்த வேண்டும் என சாதனையாளர்களுக்குத் தெரியும்.


9. சாதாரண மனிதர்கள் பலரும் பணத்தை இலக்காக வைத்து உழைக்கிறார்கள். சாதனையாளர்கள் தனது உயர்வை இலக்காக வைத்து உழைக்கிறார்கள்.


10. இதுவா, அதுவா என்ற குழப்பத்துடன் உடனடிப் பலன்களை அனுபவிக்க ஆசைப்படுவார்கள் சாதாரண மனிதர்கள். சாதனையாளர்களிடம் குழப்பம் என்பதே இருக்காது. நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் வெற்றியை அடையவே இவர்கள் விரும்புவார்கள்.


11. இவ்வளவு நேரம் உழைத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது சாதாரண மனிதர்களின் எண்ணமாக இருக்கும். இவ்வளவு நேரம் உழைத்தால் எம்மாதிரியான பலன்களும், விளைவுகளும் அனுபவமும் கிடைக்கும் என்பதே சாதனையாளர்களின் எண்ணம்.


12. ஒரு பிரச்சினை உருவானால் அதனைப் பெரிதாக வளர விட்டு, ஒன்றுமே தெரியாதவர் போல இருப்பவர்கள் தான் சாதாரண மனிதர்கள். எவ்வளவு பெரிய பிரச்சினை என்றாலும் அதனைச் சமாளிக்கும் திறன் பெற்றவர்கள் தான் சாதனையாளர்கள்.🌹


13. கையில் இருக்கும் பணத்தை இழந்து விடக் கூடாது என சிந்திக்கும் சாதாரண மனிதர்களுக்கு முன், பணத்தை எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம், சேமிக்கலாம் என்று சிந்தனனை கொள்பவர்கள் தான் சாதனையாளர்கள்.


*நாட்டில் சாதனையாளர்களை விட சாதாரண மனிதர்கள் தான் அதிகம். இனிவரும் காலங்களில் சாதாரண மனிதர்கள் கூட சாதனையாளராக மாற வேண்டும் என வாழ்த்துகிறோம்.*

No comments:

Post a Comment