*இலுப்பை மரம்* பல்லாண்டு பலன் தரக்கூடிய மரம் இலையின் நுனிப்பகுதியில் வெண்மை நிறப் பூக்களும் முட்டை வடிவ சதைக்கணியும் கனியனுள் 3 (அ)4 விதைகள் உடையது இதன் சமூலமும் மருத்துவ குணம் உடையது நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும் பசி உண்டாகும் சதை நரம்புகளை சுருங்கச் செய்யும் காமம் பெருக்கும் இதன் இலையை மார்பகத்தில் வைத்து கட்டி வர தாய்ப்பால் சுரப்பு மிகவும் 50 கிராம் பூவை அரை லிட்டர் நீரில் இட்டு 200 மில்லியாக காய்ச்சி வடிகட்டி காலையில் மட்டும் ஒரு மாதம் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும் 10 பூவை 200 மில்லி பாலில் போட்டு காய்ச்சி வடிகட்டி அருந்தி வர தாது பெருகும் காய்ச்சல் குணமாகும் தாகம் குறையும் பச்சை மர பட்டையுடன் சிறிது கசகசா சேர்த்து உடம்பில் தடவி வைத்திருந்து குளிக்க சொறி சிரங்கு ஆறும் இலுப்பை எண்ணெய் வெதுவெதுப்பாக சூடு செய்து தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி நரம்பு தளர்ச்சி தீரும் 10 கிராம் பின்னாக்கை நீர் விட்டு அரைத்து 50 மில்லி நீரில் கலக்கி நஞ்சு உண்டவர்களுக்கு கொடுக்க வாந்தியாகி நஞ்சு பொருள் வெளியாகும் நன்றி

No comments:
Post a Comment