Sunday, April 7, 2024

செய்தித் துளிகள் - 07.04.2024(ஞாயிற்றுக்கிழமை)

 

⛑️⛑️தமிழகம் முழுவதுமாக வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு இன்று 07.04.2024 அன்று 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.                      

⛑️⛑️சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி போராட்டம் நடத்திய  ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் கிடையாது - தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் விளக்கம்.

⛑️⛑️ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் கிடையாது - சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலர் மீது துறை  நடவடிக்கை - இயக்குனர்.

⛑️⛑️ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறும்''

👉``இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்''

``சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம்தானே தவிர, அவை நிராகரிக்கப்படவில்லை''

👉ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தமிழ்நாட்டின் நிதிநிலை விரைவில் சீராகும்

👉அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும் - முதல்வர் ஸ்டாலின் உறுதி

⛑️⛑️மதுரை மாவட்ட பெண் ஆசிரியரை கடுமையாக வெட்டி நகை பறிப்பு...

நாள்: 05.04.2024

👉மதுரை மாவட்டம், கிழக்கு ஒன்றியத்தில் பணிபுரியும் பெண் ஆசிரியை இரண்டு மூன்று நாட்கள் பள்ளிக்கு ஒரே ஆட்டோவில் சென்றுள்ளார். 05.04.2024 அந்த ஆட்டோ டிரைவர் கூடுதலாக மற்றொரு நபருடன் சேர்ந்து  வழக்கமான பாதையில் பள்ளிக்கு செல்லாமல் வண்டிக்கு பெட்ரோல் நிரப்ப  வேண்டுமென்று ஆள் நடமாட்டம் இல்லாத வேறு பாதைக்கு அழைத்துச் சென்று கழுத்து, காதில் இருந்த நகைகளை பறித்து மிக கடுமையாக கழுத்து மற்றும் தலை பகுதியில் வெட்டி உயிர் போகின்ற அளவிற்கு படுகாயத்தை ஏற்படுத்தி நகைகளை பறித்து சென்றுள்ளனர் சமூகவிரோதிகள்.

⛑️பள்ளி வேலை நேரத்தில் மது போதையில் இருந்த தலைமையாசிரியர் பணி நீக்கம் (Dismiss) செய்யப்பட்டார்.

⛑️⛑️Income Tax Return - EFiling | ஆசிரியர்கள் / பணியாளர்கள் தங்கள் DDO விடம் இருந்து Form-16 பெற்று அதனடிப்படையில் வருமான வரி கணக்கை தாக்கல்.

⛑️⛑️SSLC மைய மதிப்பீட்டுப் பணிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வது குறித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️RTE - இலவச சேர்க்கை கட்டணம் தாமதம்: தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி                                                               ⛑️⛑️2023-24ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return - e.Filing) செய்யும் வசதி 01.04.2024 முதல் வருமான வரி இணையதளத்தில் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

⛑️⛑️தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதை விடவெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பது நல்லது.

⛑️⛑️12th பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் புதிய விதிமுறை. அதிரடி அறிவிப்பு.

⛑️⛑️"கொரோனாவை விட 100 மடங்கு மோசம்"

"H5N1 தொற்றுநோய் கொரோனா வைரஸை விட 100 மடங்கு மோசமானது; நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம் இது" - பறவைக் காய்ச்சல் தொற்றுநோய் குறித்து ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை.

⛑️⛑️மிகவும் வறுமையில் வாடும் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 71 லட்சம் என காங்கிரஸ் அதிரடி வாக்குறுதி; மத்திய அரசு வேலையில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு எனவும் உறுதி.

⛑️⛑️திமுகவால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என  கேட்டவர்களுக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையே பதில்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு.

⛑️⛑️நேற்று சேலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 41.5° C ஆக பதிவாகியுள்ளது. இது  இயல்பைவிட 3.9 °C அதிகம்

👉திருப்பத்தூரில் 41.4 °C வெப்பநிலை பதிவு. இயல்பைவிட 4.2 °C அதிகம்.

👉கரூர் பரமத்தியில் 41.0 °C பதிவு. இயல்பைவிட 4.5 °C அதிகம்

👉உதகமண்டலத்தில் 28 ° C வெப்பநிலை பதிவு. இயல்பைவிட 5.8 °C அதிகம்.

⛑️⛑️ஹர்திக் பாண்டியா மீது தவறு இல்லை. அவரை இந்தியன்ஸ் அணி கேட்டனாக நியமித்தது நிர்வாகம் தான். ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக முழக்கமிடுவது மிகவும் தவறான செயல். 

-சவுரவ் கங்குலி

⛑️⛑️உதயநிதி ஏன் அரசியலுக்கு வந்தார் என கேட்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

திராவிடத்தின் எதிரிகளை 

திராவிட துரோகிகளை கதறவிடுறார்ல. அதுக்குதான் வந்துள்ளார் உதயநிதி

சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

⛑️⛑️நாங்கள் சாத்தியமாக்கிய திட்டங்களில்தான் மோடி அரசு ஓடிக்கொண்டு இருக்கிறது

ஏழை குடும்பத் தலைவிக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம், கல்விக்கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகள் சாத்தியமில்லை என்ற விமர்சனங்களுக்கு 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதில்

⛑️⛑️மயிலாடுதுறையில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறுத்தையை பிடிக்கும் பணிக்கு சென்னை கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் நேரில் ஆய்வு

⛑️⛑️ஒரே நாடு ஒரே தேர்தல் கூடவே கூடாது.74 வாக்குறுதிகள் கொண்ட மதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

வைகோ

⛑️⛑️பொருத்தமற்ற கூட்டணியை நாங்கள் அமைக்கவில்லை

சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் பாஜக உடன் பாமக கூட்டணி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வரி, செஸ் வரி அதிகமாக இருப்பதே காரணம்

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை சீரமைத்தாலே விலையை குறைக்க முடியும்

காங்., தேர்தல் அறிக்கை மீது சந்தேகப் பேர்வழிகளுக்கே சந்தேகம் எழுந்துள்ளது

"காங்., கொண்டு வந்த திட்டங்கள் மீது சந்தேகம் எழுப்பினார்கள்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

⛑️⛑️குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும், 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும்``நுழைவுத் தேர்வுகளில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படும்''

"புதுச்சேரி மற்றும் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

⛑️⛑️இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மட்டுமல்ல இந்தியாவே மீட்கப்படும்..

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

⛑️⛑️சென்னையில் தங்கத்தின் விலை புதிய உச்சம்.

சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.105 உயர்ந்து ரூ.6,615-க்கும் சவரன் ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது. 

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.87-க்கு விற்பனையாகி வருகிறது.

⛑️⛑️பாஜகவின் 44 வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மீண்டும் ஒருமுறை ஆட்சி பொறுப்பை வழங்கி மக்கள் ஆசீர்வதிப்பார்கள் என நம்பிக்கை

⛑️⛑️வன்னியர் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது திமுக அரசு தான்

நாம் செயல்படுத்திய காலை உணவு திட்டம் கனடா வரை சென்றுள்ளது

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால், கிராம பொருளாதாரம் உயர்கிறது

எடப்பாடி பழனிசாமி வாயை திறந்தாலே பொய் தான் வருகிறது

வெள்ளம் வந்த போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக வருகிறார்

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

⛑️⛑️ஆளுநருக்கு மாநில உரிமை குறித்துப் பாடமெடுக்கும் பேராசிரியர் தான் பொன்முடி  

விக்கிரவாண்டி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடியை புகழ்ந்த

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⛑️⛑️தொடர்ந்து 7வது முறையாக குறுகிய  கால கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றமில்லை:

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது.

No comments:

Post a Comment