நீ மகிழ்ச்சியாக
இருக்கும்போது
ஒரு கூட்டமே
உன்னோடு இருக்கும். நீ
துன்பத்தில் இருக்கின்ற நேரத்தில்
அந்த கூட்டத்தில் இருக்கும்
உண்மையான உறவு மட்டுமே
உனக்குக் குரல் கொடுக்கும்!!
🏚️ *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி மோரிலிட்டு சிறிது உப்பும் சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும்.
📰 *நாளும் ஒரு செய்தி*
மாலைக்கண் நோய் *"உயிர்ச்சத்து ஏ"* குறைபாட்டால் ஏற்படுகிறது.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
மோர்க்குழம்பு செய்யும்போது கடலைப் பருப்புக்கு பதிலாக துவரம் பருப்பை ஊற வைத்து அரைத்து சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
வெளிச்சத்தை பார்த்து நில். நிழல் பின்னுக்குப் போய்விடும்.
*-வால்ட் விட்மென்*
📆. *இன்று ஏப்ரல் 13-*
▪️ *1919- ஜாலியன் வாலிபாக் படுகொலை நாள்.*
▪️ *1954-இல் காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1930- *பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்* ( பாவலர்)
No comments:
Post a Comment