Tuesday, April 16, 2024

சார்லி சாப்ளின்

உலகுக்கே நம்பிக்கையையும் நகைச்சுவை வழியாக தந்த சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin) 1889ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி லண்டனில் உள்ள வால்வோர்த் என்ற இடத்தில் பிறந்தார்.


1912ம் ஆண்டு லண்டன் நகரில் உள்ள நாடகக் குழு மூலமாக சென்ற அமெரிக்கப் பயணம் இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.


பிறகு இவரை கீ ஸ்டோன் சினிமா நிறுவனத் தயாரிப்பாளர் தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். இவர் நடித்த முதல் மௌனத் திரைப்படம் மேக்கிங் ஏ லிவிங் 1914ம் ஆண்டு வெளிவந்தது.


ஒரே வருடத்தில் 35 திரைப்படங்களில் நடித்தார். அனைத்துமே சாதனை படைத்தன. 1936ம் ஆண்டு பேசும் படக்காலம் தொடங்கியது. மாடர்ன் டைம்ஸ் என்ற பேசும் படம் தயாரித்தார். இதில் இவர் பேசாமல்தான் நடித்தார்.


இரண்டு முறை ஆஸ்கர் சிறப்பு விருதுகளை வென்றுள்ளார். உலகையே சிரிக்க வைத்த இவர் 88வது வயதில் (1977) மறைந்தார்.🌹🌹🌹

No comments:

Post a Comment