Tuesday, April 16, 2024

செய்தித் துளிகள்16.04.2024 (செவ்வாய்க்கிழமை)


தபால் வாக்கு செலுத்த கூடுதல் அவகாசம்: 

தபால் வாக்கு செலுத்துவதற்கு இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு. 

படிவம் 12ஐ பூர்த்தி செய்து வழங்கிய அரசு ஊழியர்களுக்கு வாக்குச் சீட்டுகள் வரவில்லை என புகார் எழுந்த நிலையில்,இன்று மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

📕📘ஏப்.23ல் மதுரையில் உள்ளூர் விடுமுறை:

ஏப்ரல் 23ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஏப்ரல் 23ஆம் தேதிக்கு பதிலாக மே 11ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாள் 

-மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா

📕📘தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி ஏப்ரல் 20ஆம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

தஞ்சையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை 

-மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவிப்பு

📕📘பெற்றோர்கள் கவனத்திற்கு

Bourn vita is not a health drink. போர்ன்வீடாவை ஆரோக்கிய பானம் பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசு.

📕📘தபால் வாக்கு, EDC பெறாதவர்கள் இன்று மாலைக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

📕📘ஒரு ஒன்றியத்திற்கு 6 பேர் வீதம் ஆர்வமுள்ள ITK தன்னார்வலர்களை மாதிரிப் பள்ளி தூதுவர்களாக நியமனம்.

📕📘பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு: முடிவுகள் ஏப்ரல் 25-ம் தேதி வெளியீடு.

📕📘குரூப்-2 மெயின் தேர்வில் ஆங்கில வழியில் தேர்வெழுதியோர் அதிகம் தேர்ச்சி டிஎன்பிஎஸ்சி மீது தேர்வர்கள் குற்றச்சாட்டு.

📕📘தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கான மையங்களில் தபால் வாக்களிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி.

தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி தபால் வாக்குக்களை தபால் மூலமாக அனுப்ப முடியாது

📕📘நாளை மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்

📕📘நேற்று முதல் மீன்பிடி தடைக்காலம்

தமிழக கடலோர பகுதிகளில் நேற்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை

📕📘ஆட்சிக்கு வந்தால் மேற்கு உத்தரப்பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிப்போம் - மாயாவதி அறிவிப்பு 

📕📘இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் - பதற்றம் அதிகரிப்பதை தடுக்க தொடர்ந்து செயல்படுவோம் என அதிபர் ஜோ பைடன் உறுதி 

📕📘நாடாளுமன்ற தேர்தலை யொட்டி 

இந்தியாவிலேயே அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 605 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் செய்தி குறிப்பு

📕📘"9 ஆண்டுகளில் பெருமுதலாளிகளின் ₹11 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த பாஜக அரசு, மாணவர்களின் கல்விக்கடனைத் தள்ளுபடி செய்ய மறுக்கிறது” 

-காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

📕📘வாக்கு பதிவு அன்று காட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் - விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலதுறை ஆணையர் வாயிலாக நடவடிக்கை எடுக்கபடும் - சத்ய பிரதா சாகு

📕📘ஹர்திக்கின் மீது நிறைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதெல்லாம் அவரின் நம்பிக்கையைக் குலைக்குமென நான் நினைக்கவில்லை

 - பொல்லார்ட்

📕📘முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான   இந்திரகுமாரி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

📕📘பீரங்கி அழிப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி

ராணுவ வீரா்களால் எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய பீரங்கி அழிப்பு ஏவுகணை அமைப்பை இந்திய ராணுவம் வெற்றிகரமாகச் சோதித்துப் பாா்த்ததாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

📕📘தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தருவோம்! 

நெல்லையில் பிரதமர் மோடி!..

📕📘மெட்ரோ பணிகள்

தாமதம் - மத்திய

அரசே காரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

குற்றச்சாட்டு

📕📘நீங்கள் தேர்ந்தெடுப்பது எம்.பியை அல்ல.

 மத்திய அமைச்சரை…

சண்முகம் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஆவார்

 இயக்குநர் சுந்தர்.சி பரப்புரை

📕📘கெஜ்ரிவால் மனு - அமலாக்கத்துறைக்கு உத்தரவு

அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு 

மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணை ஏப்ரல் இறுதி வாரத்துக்கு தள்ளிவைப்பு

📕📘திமுக கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு

மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணிக்கு தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அந்தவகையில், எல்பிஎஃப், எச்எம்எஸ், ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அத்துடன், விவசாயிகள், தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசை அகற்றி நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்                                              📕📘அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

ஈரான்-இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா தலையிட்டால், ஈரானுக்கு ஆதரவாக போரில் ரஷ்யா களமிறங்கும் என்று புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்றும், அப்படி தலையிட்டால், ஈரானுக்கு ஆதரவாக போரில் ரஷ்யா குதிக்கும் என்றும் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்

📕📘தமிழ்நாட்டில் 8 இடங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது!

ஈரோட்டில் அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

சேலம், 

திருப்பத்தூர், 

வேலூர், 

கரூர் பரமத்தியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

திருத்தணி, 

தருமபுரி, 

நாமக்கல்லில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

📕📘தீயணைப்புத் துறையின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் கடந்தாண்டை விட இவ்வாண்டு தீ விபத்துகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது

திருச்சி மத்திய மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் குமார் அதிகாரி பேட்டி

📕📘இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது

அம்பேத்கர் ஏற்றி வைத்த அரசியல் சட்டம் என்னும் ஒளியை சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமை

முதல்வர் ஸ்டாலின்

📕📘டெல்லி புறப்பட்டு சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்

📕📘சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு

தங்கம் ஒரு கிராம் ரூ.6,790-க்கும், சவரன் ரூ.54,320-க்கும் விற்பனையாகிறது

📕📘புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும்: காங் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை

🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment