🌅🌅RTE 25% இலவச மாணவர் சேர்க்கை விதிகளை மாற்றியமைக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர் வலியுறுத்தல்.
🌅🌅மேல்நிலை முதலாம் ஆண்டு கருத்தியல் தேர்வு.. உழைப்பூதியம் கூடுதல் தொகை வங்கி கணக்கில் செலுத்திய விபரம். அரசு தேர்வு உதவி இயக்குனர் தகவல்.
🌅🌅பள்ளிகளுக்கு ஒழுங்குமுறை சட்டத்தில் விலக்கு – உயர்நீதிமன்றம் தகவல்.
🌅🌅மாற்றுப்பணியில் சென்ற ஆசிரியா்கள் கல்வியாண்டின் இறுதி நாளில் அவரவா் பள்ளியில் சென்று வேலையில் சேர பள்ளிக்கல்வித் துறை உத்தரவு. 🌅🌅பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற வழக்கு 18.04.2024 அன்று விசாரணைக்கு வருவதாக இருந்த நிலையில் விசாரணையை 01.05.2024க்கு தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்.
🌅🌅அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் இதுவரை 3.20 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: மேலும் அதிகரிக்க ‘ஹெல்ப் லைன்’ வசதி.
🌅🌅தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் பயன்பெறும் வகையில் விதிகளை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.
🌅🌅வரும் கல்வியாண்டு முதல் 6,9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் சோதனை முறையில் தேசிய மதிப்பெண் கட்டமைப்பு (என்சிஆா்எஃப்) நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
🌅🌅தமிழ்நாடு முழுமைக்கும் தேர்தல் நடக்கும் வாரம் ஏப்ரல் 15 முதல் 19 வரை ஆசிரியர்கள் பள்ளி செல்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
🌅🌅வருமான வரி TDS / 24Q சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை வெளியீடு.
🌅🌅கல்வி உதவித் தொகை குறித்துவரும் செல்போன் அழைப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
🌅🌅தேர்தல் நடைமுறையில் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்பினை அதிகப்படுத்தும் விதமாக 14.04.2024 அன்று வினாடிவினா நிகழ்ச்சி - செய்தி வெளியீடு.
🌅🌅ஆசிரியர்கள் எந்த வித கட்சி சார்புமின்றி செயல்பட வேண்டும் - பூத் ஏஜென்ட் பணி: ஆசிரியர்களுக்கு தடை.
🌅🌅174 தொழில்நுட்ப படிப்புகளுக்கான பாடங்கள் தமிழில் மொழியாக்கம்: சென்னை ஐஐடி தகவல்.
🌅🌅Income Tax தாக்கலில் வீட்டு வாடகைப் படியின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு சிறப்பு ஏற்பாடா? மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம்
🌅🌅பயனாளர்களுக்கு ஆப்பிள் எச்சரிக்கை:
ஐ போன் உள்ளிட்ட சாதனங்களில், பெகாசஸ் போன்ற ஸ்பைவேர் தாக்குதல்; இந்தியா உள்ளிட்ட 91 நாடுகளில் உள்ள பயனாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை.
🌅🌅மக்கள் பணம் - பணக்காரர்களிடம் உள்ளது:
70 கோடி மக்களிடம் இருக்க வேண்டிய பணத்தின் அளவு 22 பணக்காரர்களிடம் உள்ளது.
விவசாயிகள் வரி செலுத்துகின்றனர்; ஆனால், தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.
-ராஜஸ்தானில் காங். எம்பி ராகுல் காந்தி பரப்புரை.
🌅🌅ஏர்டெல் செல்போன் சேவை கட்டணங்கள் உயர வாய்ப்பு:
மக்களவைத் தேர்தலுக்கு பின் ஜூலை-அக்டோபரில் ஏர்டெல் செல்போன் சேவைக் கட்டணங்கள் 15-17% உயர வாய்ப்பு எனத் தகவல்.
கட்டணம் உயர்வால் ஏர்டெல்லுக்கு தனிப் பயனரின் சராசரி வருவாய் ரூ.208ல் இருந்து 2027ல் ரூ.286ஆக அதிகரிக்க வாய்ப்பு; கடைசியாக 2021ஆம் ஆண்டு டிசம்பரில் ஏர்டெல் செல்போன் சேவைக் கட்டணங்கள் 20% உயர்த்தப்பட்டிருந்தது.
🌅🌅தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியின் நல்ல வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதிலே பெருமை அடைகிறேன்
கமலஹாசன்
🌅🌅பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு நல்லது செய்து கொண்டிருக்கிறார்.
ஒரு பிரதமர் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவதை பார்த்து சந்தோஷப்பட வேண்டும். ஒரு மாநிலத்தை நோக்கி, இந்த நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர் வருகிறார் என்றால் மகிழ்ச்சி அடைவதை விட்டு விட்டு ஏன் பதற்றப்படுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
தமிழிசை
🌅🌅மல்லிகார்ஜுன கார்கே 15ஆம் தேதி தமிழ்நாடு வருகை
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரும் 15ஆம் தேதி தமிழ்நாடு வருகை
கடலூர் மற்றும் புதுச்சேரி தொகுதி வேட்பாளர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரிக்க உள்ளார்
🌅🌅சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., பொது சிவில் ஆகிய சட்டங்களை ஏற்க மாட்டோம் - மம்தா திட்டவட்டம்
🌅🌅ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னத்தை கொடுத்துவிட்டு,
ஸ்விட்ச் இருக்கும் மைக் சின்னத்தை வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டுகிறார்கள்
நாம் தமிழர் கட்சி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்.
🌅🌅23 இன நாய்களுக்கு மத்திய அரசு விதித்த தடை ரத்து
பிட் புல் உள்ளிட்ட 23 இன நாய்களுக்கு மத்திய அரசு விதித்த தடையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என அடையாளம் காணப்பட்ட 23 இன நாய்களுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிய ஆலோசனைக்கு பிறகு, புதிதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கலாம் எனக் கூறி, தடையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
🌅🌅"தமிழ்நாடு எதிலும் முதலிடம்"
இந்தியாவின் எழுச்சிக்கு திராவிட மாடலே வழிகாட்டி
தமிழ்நாடு எதிலும் முதலிடம்; அதற்கு மத்திய அரசின் ஆவணங்களே சாட்சி
பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணிகள் சுகாதாரம், மகப்பேறுக்குப் பின் கவனிப்பு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கணினி பொருள்கள் ஏற்றுமதி ஆகிய பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த மத்திய அரசின் அறிக்கைகள் அனைத்திலும் தமிழ்நாடே முதலிடம்
திமுக அறிக்கை
🌅🌅எனது மூத்த சகோதரரின் (விஜயகாந்த்) மகன் அரசியலுக்கு வருவதை முழு மனதுடன் வரவேற்கிறேன்.
விருதுநகரில் விஜய பிரபாகரனா?, ராதிகாவா? என்பதை மக்கள் முடிவெடுக்கட்டும்"
நடிகர் நவரச நாயகன் கார்த்திக் பேட்டி
🌅🌅சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு.
தங்கம் ஒரு கிராம் ரூ.6,725-க்கும்,
சவரன் ரூ.53,800-க்கும் விற்பனையாகிறது.
🌅🌅திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம.
.jpeg)
No comments:
Post a Comment