Friday, April 12, 2024

தன்னடக்கம் என்று எல்லோரும் கூறுகிறார்களே விளக்க முடியுமா?

பக்தி மார்க்க நண்பரிடம் ஒரு முறை கேட்டபோதுஅவர் கொடுத்த விளக்கம் இன்றும் நினைவில்.

Simple. கோவிலுக்கு போகிறீர்கள். 

அங்கே ஆஞ்சநேயரை பார்க்கிறீர்கள். 

அவர் எப்போதும் இரு கைகூப்பி வணங்கி கொண்டிருப்பார். கவனித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்.

உண்மைதான். ஆஞ்சநேய பெருமான் எப்போதும் வணங்கியபடியேதான் 

இருப்பார்.

பேராற்றலும் சக்தியும் படைத்த ஆஞ்சநேயர் எளிமையாக கைகூப்பி 

நமக்கு தரிசனம் கொடுக்கிறாரே? 

அதுவும் தன்னடக்கம்தான்.

அவர் ஸ்ரீராமபக்தர். எனவே அவரை சதா சர்வகாலமும் மனதில் எண்ணிகண்மூடி வணங்குவது போல காட்சி அளிக்கிறார்

ஆஞ்சநேயர் ஒரு தெய்வீக குறியீடு. எவ்வளவு பெரும் ஆற்றலும், புத்தி கூர்மையும் இருந்தாலும், தன்னடக்கத்தோடு இப் பிரபஞ்சத்தையே உருவாக்கி ஆண்டு கொண்டிருக்கும் சர்வமகாசக்தியை ( ஸ்ரீராமரை) எப்போதும் மனதில் நினைத்து கொண்டு,

எந்த தன்முனைப்பும் இல்லாமல் 

இருக்கும் அந்த தெய்வீக குறீயிடையே தன்னடக்கத்தின் சொரூபமாக நினைத்து கொள்ளுங்கள்.

உங்களுக்குள்ளும். அமைதியும், அன்பும், கருணையும்  பெருகும் " என்றார்.

உண்மைதான். 

Ego இல்லாமல், தான் தனது என்ற ஆர்ப்பாட்டமில்லாமல், தன்னடக்கத்தோடு, நாம் பிரபஞ்சத் துளி என்ற எண்ணத்தோடு  இருந்து பாருங்கள். 

நம்மை சுற்றி நல்ல மாற்றங்கள் 

இயல்பாக நிகழும்.

இறையே குருவே சரணம் சரணம்

No comments:

Post a Comment