வாழ்கையை முறையை சிறப்பாக கட்டமைத்துக்கொள்ள நாம் நமது செயல்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். நமது வேலைகளை சரியாக திட்டமிட்டு செய்ய தொடங்கினாலும் இடையே ஏற்படும் தடங்கள்கள் மற்றும் கவனச்சிதறல்கள் காரணமாக செயல்களை சரியாக செய்ய முடிவதில்லை. கவனச்சிதறல்களுக்கு முக்கிய காரணம் செயல்களில் மனது முழு ஈடுபாடு செலுத்தாததே காரணமாக அமைகிறது. இதை சரிசெய்து கொள்வதற்க்கான வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
மூளையினுடைய செயல்திறனை அதிகரிக்க தேவையான பயிற்சிகளில் ஈடுபடுவது மிகவும் முக்கியம்.
மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதற்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியும் அவசியமாகும்.
உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு முறைகளை எடுக்க பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். அதேபோல 6 முதல் 8 மணிநேர உறக்கம் மிகவும் அவசியம்.
உங்களுக்கு பிடித்த இசைகளை கேட்க பழகும்போது உங்களது மூளை புத்துணர்வு அடையும். கவனிக்கும் திறன் மேம்படும்.
உங்களது தினசரி செயல்முறைகளுக்கு அதிமாக யோசிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். அவைகளுக்கு நிரந்தரமான வழிமுறைகளை உருவாக்கி பின்பற்ற பழகிகொள்ளுங்கள்.
இன்றைக்கு நமது கவனத்தை சீரழிப்பதில் முக்கியபங்கு வகிப்பது நம்மிடம் உள்ள கைபேசியே ஆகும். இதை பயன்படுத்த சரியான காலதிட்டமிடல் அவசியம்.
கவனத்தை அதிகரிக்க மற்றுமொரு முக்கியமான விசயம் தியானபயிற்சி மேற்கொள்வது.
இன்றைக்கு கவனசிதற்களுக்கு முக்கிய காரணமாக அமைவது நம்மிடையே தோன்றும் தேவையற்ற நினைவுகளே. மனதை சரியாக கட்டுப்படுத்த தேவையான வழிமுறைகளை அறிந்து நிகழ்காலத்தில் வாழ்வதற்கு கற்றுக்கொள்ளும் போது நமது செயலில் கவனம் அதிகரிக்கும்.
கவனத்தை அதிகரித்துக்கொள்ள மற்றுமொரு முக்கியமான விசயம் நேரத்தை முழுமையாக நிர்வகிக்க தேவையான வழிமுறைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வது. வேலை இலலாத நேரங்களில் தான் தேவையற்ற நினைவுகள் நம்மை ஆட்கொள்ள தொடங்கிறது.
முடிந்தவரை வாழ்கைமுறையை எளிமையாக வைத்துக்கொள்ள பழகுங்கள். அதிகப்படியான தேவையற்ற விசயங்களில் நம்மை ஈடுபடுத்தி கொள்வதினால் தான் நமது கவனிக்கும் திறன் சீர்குழைகிறது.
மேற்குறிய வழிமுறைகளை கடைபிடிக்கும் போது உங்களது கவனிக்கும் திறன் மேம்படும்.
🙏நன்றி🙏
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment