"துயரம் தந்தவர்களைப் பழி வாங்கத் துடிக்காதே...
தூக்கி விட்டவர்களை, நன்றி மறவாதே...
வஞ்சனை, சூது, கோபமதை மனதில் வளர்க்காதே...
வாடிய ஏழைக்கு வலியச் சென்று உதவாது இருக்காதே.
"கண்ணால் காண்பதை நம்பி ஏமாறாதே...
கழுத்தறுக்கும் கயவர்களோடு கூட்டுச் சேராதே..
எளியவர்களை,
நீ வாழ
ஏறி மிதிக்காதே...
ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காதே."
"உண்மைக்குப் புறம்பாய் ஒரு போதும் நடக்காதே...
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதே...
அதிர்ஷ்டத்தை நம்பி உழைப்பைக் கை விடாதே...
அன்புப் பெற்றோரின் ஆசிர்வாதத்தைப் பெறத் தவறாதே."
"ஆசைக்கு அடிபணிந்து அராஜகம் பண்ணாதே...
ஆறுவது சினம் என்பதை மறந்து, அகங்காரம் கொள்ளாதே...
நீ வாழத் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்காதே...
நிம்மதி, அமைதி, சந்தோஷம் நிலைக்க, நல்லதைத் தவிர எதையும் செய்யாதே...
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி என்பதால் அவனை வணங்கி...
நித்தமும் பிரார்த்தனை செய்வதே 'அமைதி, சந்தோஷம், நிம்மதி' என்றும் வாழ்வில் நிலைக்கும் உயரிய வழி என்பதை உணர்வாய்."
🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫
No comments:
Post a Comment