*உலக்கை பாலை.* பொதுவாக இதில் மூன்று வகை உள்ளன உலக்கை பாலை குடசப்பாலை வெப்பாலை உலகைப் பாலை மிக கடினமான தோல் போன்ற அழுத்தமான கரும்ப பச்சை நிற இலைகளை உடைய மரம் சிறிய மலர்களையும் உண்ணக்கூடிய கனிகளையும் தட்டையான விதைகளை உடையது பட்டை பழம் மருத்துவ பயன் உடையது உடலுக்கு குளிர்ச்சி தருதல் சதை நரம்புகளை சுருங்கச் செய்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது 50 கிராம் பட்டையை சிதைத்து இரண்டு லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டிய நீரை காலை மாலை 50 மில்லி அளவாக இரண்டு அல்லது மூன்று வேளை குடித்து வர சீத கழிச்சல் குருதி கழிச்சல் குருதி மூலம் பெரும்பாடு வெப்ப காய்ச்சல் ஆகியவை குணமாகும் இதன் பழத்தை நாள்தோறும் சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கரப்பான் கபம் வெப்ப கிராந்தி ஆகியவை தீரும் மற்றும் பசி யை தூண்டும் நன்றி.

No comments:
Post a Comment