Monday, January 1, 2024

ஆங்கிலப் புத்தாண்டு வரலாற்றுப் பார்வை.


ஜனவரி1ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்!

ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவ காலண்டர் அல்ல. மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை ஆகும். இது பண்டைய #ரோம_கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான

காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும்.


#ஜனவரி : ‘ஜானஸ்’ என்பது ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு.46 ஆம் ஆண்டு ஜூலியஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார்.


#பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம்.


•#மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது.


•#ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். ஆரம்பத்தில் #ஆண்டின்_தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘#போப்பாண்டவர்’ தான் புத்தாண்டை ஏப்ரலிலிருந்து ஜனவரிக்கு மாற்றினார்! இதனை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளவில்லை. 

எனவே

ஜனவரி 1 ஆம் நாளை புத்தாண்டின் முதல் நாளாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள் மற்ற ஐரோப்பியர்களைப் பார்த்து ஏப்ரல் 1 ஆம் நாள் ‘#முட்டாள்களின்_தினம்’ என்று அழைக்கத் தொடங்கினர்! இப்படி பிறந்தது தான் முட்டாள்கள்தினம்!


•#மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.


•#ஜூன் : ரோம கடவுள் ‘ஜுனோ ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது.


•#ஜூலை : மன்னர் ‘#ஜூலியஸ்_ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.


•#ஆகஸ்ட் : மன்னர் ‘#அகஸ்டிஸ்_ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.


•மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 9,10,11,12 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை #கடவுளின் பெயர்கள்தாம்.


இது ஒரு புறமிருக்க,,இந்தக் காலண்டரின் மாதங்களின் நாள்களை முடிவு செய்ததிலும் ‘ஒரு முட்டாள்தனமான’ வரலாறு உள்ளது!


முதலில் மாதங்களின் நாள்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களும் மாறி மாறி வந்தன.


அதாவது ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 இதனை #ஜூலியஸ்_ஸீஸர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன் பெயரில் உள்ள மாதத்திற்கு அதாவது ஜூலை மாதத்திற்குச் சேர்த்தார்! அதனால் 30 நாளாக அதுவரை இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறியது! காலண்டர் மொத்தமும் மாற வேண்டியது வந்தது. ஆகஸ்ட் 30 நாளானது இப்படிக் கொஞ்ச காலம் போனது.


பின்னர் #அகஸ்டியஸ்_ஸீஸரின் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்க வேண்டும் என்று கோரினர். மீண்டும் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்க்கப்பட்டது.

ஆக இத்தனைக் குழப்பத்திற்குப் பின்னர்தான் நாம் வைத்திருக்கும் இந்தக் காலண்டர் தயாரிக்கப்பட்டது. இது ‘#கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் என்று அழைக்கப்படும்.


இப்படி ‘முட்டாள்தனமான’ ஒரு வரலாற்றை மூடிமறைத்து நம்மைப் பின்பற்ற வைத்துள்ள மேற்கத்தியர்களை உண்மையில் ‘அறிவாளிகள்’ என்ற சொல்ல வேண்டும்! ஆக இந்தக் காலண்டருக்கும் #இயேசுவிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.


ஆனால் எப்பொழுது கிறிஸ்தவம் ‘ரோமன் கத்தோலிஸம்’ என்று மாறியதோ, அந்நாள் தொடங்கி கொள்கை முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் ரோம கிரேக்க அநாகரிகம் (Paganism) ஊடுருவி விட்டது!


இந்த நாளைத்தான் கண்விழித்து கேக் வெட்டி, யாரையும் தூங்கவிடாம, வாழ்த்துச் சொல்லியே சாகடிக்கிறோம். அதுவும் முகநூல், வாட்சப், மெசஞ்சர் எல்லாம் கற்பமான காட்டுயானமாதரி உப்பிபோய் இருக்கிறது.


சரி இவ்வளவு தூரம் நேரவிரயம் செய்து அர்த்தமற்ற முட்டாள்களின் காலண்டர் முறையின் வரலாற்றை படித்து விட்டீர்கள், கொஞ்சம் நேரம் ஒதுக்கி அறிவியல் பூர்வமாக கிரக சுழற்சியை வைத்தும், அதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் இவற்றை அடிப்படையாக வைத்தும் கணிக்கப்பட்ட நம் தமிழர் நாள்காட்டி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.



#தமிழ்நாள்காட்டி


பழந்தமிழர் காலத்தைப் #பெரும்பொழுது_சிறுபொழுது என இரண்டாகப்பிரித்தனர்.



ஒரு வருடத்தை இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி), கார்(ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, )பின்பனி ( மாசி, பங்குனி) என்று #ஆறாகப் பிரிப்பதுதான் பெரும் பொழுது.



ஒரு தினத்தை வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று #ஆறாகப் பிரிப்பதுதான் சிறுபொழுது.



ஒரு தினம் 60 நாழிகை கொண்டது என்றும் கணக்கிட்டனர். ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள். இன்றைய 24 மணிநேரம் கொண்ட ஒருநாள் இந்த கணக்குக்கு சரியாகப் பொருந்துகிறது.



தமிழில் நாட்களுக்கு ஞாயிறு என்று சூரியனின் பெயரும் கிரகங்களின் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன.



நட்சத்திரங்களை முன்வைத்தும் பூமியின் சுழற்சியை அடிப்படையாக வைத்தும் உருவாக்கப்பட்டதாகத் தமிழ் காலண்டர் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



சித்திரை1 அன்று புத்தாண்டு தொடங்குவது என்பது தமிழில் மட்டும் அல்ல. #அஸ்ஸாம்_வங்காளம்_கேரளம்_பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் சித்திரை1 தான் புத்தாண்டு.



இந்தியாவுக்கு வெளியிலும் #பர்மா_கம்போடியா_லாவோஸ்_நேபாளம்_தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்தத் தேதிதான் புத்தாண்டு.



பழமையான வான சாஸ்திரமான #சூரிய_சித்தாந்தம் எனும் சமஸ்கிருத நூலில் நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையின் காலமாக 60 வருடங்கள் கணிக்கப்பட்டுள்ளன. அதில்தான் இன்று நாம் கடைப்பிடிக்கிற தமிழ் வருடங்களின் பெயர்ப் பட்டியல் முதலில் காணப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment