👉அன்பிற்குரிய இஸ்லாமிய ஆசிரிய சகோதர சகோதரிகள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும இனிய ரமலான் பெருநாள் நல்வாழ்த்துகள்.!
👉நோன்பும் இறைவேண்டலும் ஈகையும் சகோதரத்துவமும் பிரகாசமாய் சுடர் வீசும் இப்பெருமக்களின் குடும்பங்களில் ஏக இறைவனின் அருளும் ஆசிர்வாதங்களும் கிடைக்க வேண்டுமாய் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் சார்பாக ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
⛑️⛑️நீட் தேர்வுக்குரிய ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மாணவர்களுக்கு இன்று மற்றும் நாளை இரவு 11.50 வரை அனுமதி.
👉ஆதார் தொடர்பான திருத்தங்களை இன்று முதல் ஏப்ரல் 15 வரை மேற்கொள்ளவும் அனுமதி அளித்து தேசிய தேர்வு முகமை உத்தரவு.
⛑️⛑️உதவித்தொகை குறித்த போலி அழைப்புகளை நம்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை
⛑️⛑️வருமான வரி பிடித்தம் செய்தல் சார்ந்து நிலுவையிலுள்ள தொகையை உடனே சரிசெய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
⛑️⛑️மதுரையில் ஆசிரியையை அரிவாளால் கொடூரமாக வெட்டி ஒன்பது பவுன் நகையை பறித்தவர்கள் அந்த ஆசிரியையின் முன்னாள் மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது. இரண்டு முன்னாள் மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
(நாளிதழ் செய்தி)
⛑️⛑️CBSE : 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையில் முக்கிய மாற்றம்: சிபிஎஸ்இ அறிவிப்பு
⛑️⛑️JEE Main 2024: இயற்பியல் ஈஸி ; (ஏப்ரல் 9) ஜே.இ.இ தேர்வு குறித்து மாணவர்கள் - நிபுணர்கள் கருத்து
⛑️⛑️பள்ளி கல்வித்துறை மற்றும் சைபர் க்ரைம் எச்சரிக்கை. மத்திய மாநில அரசுகளிடமிருந்து கல்வி உதவி தொகை ( Scholarship ) சம்மந்தமாக எந்த ஒரு அதிகாரிகளும் தங்கள் அலைபேசிகளுக்கு தொடர்பு கொள்ளமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ⛑️⛑️மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 3.6 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது:
தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தகவல்
⛑️⛑️வாக்குப்பதிவு முன்னேற்பாடுகள் தீவிரம்:
வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி சென்னையில் நேற்று தொடக்கம்; வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரம்.
⛑️⛑️கரூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை, வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என தகவல்
⛑️⛑️மதுபான கொள்கை வழக்கில், முதலமைச்சர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி, கைது சட்ட விரோதமானது அல்ல என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.
தீர்ப்பை அடுத்து உச்சநீதிமன்றம் நாட உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு .
⛑️⛑️அமெரிக்க வருடாந்திர விண்வெளி கருத்தரங்க கூட்டத்தில் சந்திரயான் 3 குழுவிற்கு விருது.
⛑️⛑️தமிழில் பேச முடியாததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன்- பிரதமர் மோடி
பொதுமக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார் பிரதமர் மோடி.
⛑️⛑️தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் வெப்ப அலை வீசும்; மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்க வாய்ப்பு.
⛑️⛑️ஏப்ரல் 19 - திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை:
தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் விடுமுறை.
-தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்.
⛑️⛑️தங்கத் தமிழ்ச்செல்வனின் குரல் தேனியின் குரலாகவும், சச்சிதானந்தத்தின் குரல் திண்டுக்கலின் குரலாகவும் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்
"பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியாக இருக்கும் இந்தியா, அமளியாக மாறிவிடும்.
மாநிலத்திற்கும், நாட்டுக்கும் நம்பிக்கை தரும் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
⛑️⛑️இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்..!''
"தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்"
"மத்திய அரசு பணியிடங்களில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு"
"வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் அபராதம் ரத்து செய்யப்படும்
முதல்வர் ஸ்டாலின்
⛑️⛑️"தேர்தல் என்ற போரில், எதிரிகளை ஓட ஓட விரட்ட வேண்டும்"
"தமிழ்நாட்டில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக"
"தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் அதிமுக தான்"
"தொடர்ந்து இழி சொற்களை கூறி வந்தால், அதிமுக தொண்டர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்"
பொள்ளாச்சி பிரசார கூட்டத்தில் ஈபிஎஸ் பேச்சு
⛑️⛑️இளையராஜா Vs எக்கோ நிறுவனம் விவகாரம்
"இசையமைப்பாளர்கள் ஒரு படத்திற்கு தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகிறார்கள்"
"காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா? என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும்"
காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி, இளையராஜா தொடர்ந்த வழக்கில் எக்கோ நிறுவனம் வாதம்
⛑️⛑️சந்திர பிரியங்கா மருத்துவமனையில் அனுமதி
காரைக்கால் எம்எல்ஏ சந்திர பிரியங்கா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது வெயிலின் தாக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
⛑️⛑️மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம்.
⛑️⛑️பூனையை மீட்க கிணற்றுக்குள் இறங்கிய 5 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே இறங்கிய 5 பேர் பலி!
அது விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கிணறு என போலீசார் தகவல்
6வது நபராக உள்ளே இறங்கியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
⛑️⛑️பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவராக நியமித்தது பாஜக தான்:
கோவையில் பிரதமர் மோடி பேச்சு.
⛑️⛑️டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அர்விந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி தாக்கல் செய்தவருக்கு 50,000 ரூபாய் அபராதம்.
முன்னாள் ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏ சந்தீப் குமார் தாக்கல் செய்த மனுவை 50,000 ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
⛑️⛑️கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் ராஜினாமா
கர்நாடகா மாநில அதிமுக செயலாளர்
எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா
ஒசூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது எஸ்.டி.குமார் அறிவிப்பு
கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என எஸ்.டி.குமார் புகார்.
⛑️⛑️2026ல் கூட்டணி ஆட்சிக்கான முன்னோட்டம்தான் 2024 கூட்டணி" -
அன்புமணி ராமதாஸ்
⛑️⛑️மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 3.6 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது:
தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தகவல்
⛑️⛑️சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு
தங்கம் ஒரு கிராம் ரூ.6,705-க்கும், சவரன் ரூ.53,640-க்கும் விற்பனையாகிறது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
.jpeg)
No comments:
Post a Comment