Tuesday, April 16, 2024

எழுத்தாணி பூண்டு - தினம் ஒரு மூலிகை

 *எழுத்தாணி பூண்டு* அல்லது முத்தெருக்கன் செவி என்று கூறுவார்கள் பற்கள் உள்ள முட்டை வடிவ காம்புள்ள இலைகளையும் எழுத்தாணி போன்ற உருண்ட தண்டுகளில் நீல நிற பூக்களையும் உடைய நேராக வளரும் செடி வயல் வரப்புகளில் தானே வளர்வதுண்டு இதை முத்தெருக்கன் செவி என்றும் கூறுவார்கள் இல்லை வேர் மருத்துவ பயன் உடையது ஐந்தில் இருந்து 10 கிராம் இலையை நன்கு அரைத்து சற்று தாராளமாக மலம் போகும்படிக்கான அளவில் காலை மாலை கொடுத்து வர குடல் வெப்பம் நீங்கும் புண் ஆறும் சீதபேதி குணமாகும் இலை சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் சேர்த்து பலமுறை காய்ச்சி உடம்பில் தடவி வர சொறி சிரங்கு முதலியவை குணமாகும் 5 கிராம் வேரை பாலில் அரைத்து கலக்கி வடிகட்டி காலை மாலை பருகி வர மார்பகம் வளர்ச்சி வரும் கரப்பான் பருவு பிளவை ஆகியவை தீரும்.

நன்றி.

No comments:

Post a Comment