பிறரை வாழ்த்த மட்டுமே விருப்பப் படு...
பிறரை வீழ்த்த எண்ணுவதை விட்டு விடு...
சோதிக்கும் கடவுளைக் கோபிக்காதே...
சாதிக்க வழி விடுபவர் அவரே என்பதை மறவாதே...
பிரச்சனைகளைத் தைரியமாய் சந்திக்கணும்...
பிரச்சனை தந்தவரை விட்டு அறவே விலகிடணும்...
குறையுள்ள மனிதன் உலகில் பிறப்பது இயற்கை...
குறைகளைக் களையாது போனால் எய்துவாய் எளிதில் இயற்கை...
கஷ்டங்கள் கடலலை என வந்தாலும்...
கையளவு நம்பிக்கை அதைக் கடக்க உதவும்."
"கிடைத்ததை அனுபவிக்கப் பழகு...
கிடைக்காததை ரசிக்கப் பழகு...
துரோகம் இழைப்பதைத் தவிர்த்து விடு...
தொண்டு செய்வதை வளர்த்து விடு...
தவறு செய்யவும், மனசாட்சிக்கும் பயப்படு...
தவறு செய்பவர்களைக் கண்டு பயம் கொள்வதை நிறுத்திடு...
மறப்பது மனித இயல்பெனில்...
மன்னிப்பது தெய்வ குணம் என்பதை உணர்ந்திடு...
துணிவுடன் எதையும் போராடப் பழகிடு...
பணிவுடன் வாழ்ந்து, பலமடங்கு வாழ்வில் உயர்ந்திடு...
நினைப்பானது நித்தமும் நலமானால்...
பிறப்பானது பெருமை தருமென்பதில் ஐயமில்லை."
🟧🟧🟧🟧🟠🟧🟧🟧🟧
No comments:
Post a Comment