Tuesday, April 2, 2024

மனம் ஒரு மாயை


மனம் ஒரு மாயை
மனம் ஒரு அதிசயம் 
எண்ணங்களின் ஊற்றுக்கண் 
எண்ணங்களை நீக்கினால் 
மனமென்ற பொருளில்லை 
எண்ணங்களின் அலைகடல் மனது 
மனம் இல்லையேல் செயல்கள் இல்லை 
நாம் எல்லோருமே, 
மனிதர்களாக இருந்தாலும், 
நமது மனம் ஒரு குரங்கு தானே 
மனம் நிறைய 
அழுக்கு எண்ணங்கள் நிறைந்து இருந்தால் 
அவன் மனிதன் அல்லன் 
மனத்துக்கண் மாசிலன் ஆதலே 
மன அமைதிக்கு வழி 
வாழ்க்கையில் நீ வெற்றி பெற 
உன் மனதை வசப்படுத்து 
தன்னுடைய மனதை 
ஆளத் தெரிந்தவனுக்கு 
அவனைச் சுற்றியுள்ள உலகம் வசப்படும் 
புத்திசாலி மனிதர்களுக்கு - 
மனம் ஒரு மந்திரக்கோல்

No comments:

Post a Comment