*ஆரொட்டிகிழங்கு (அ)கூகைகிழங்கு* பார்ப்பதற்கு மஞ்சள் செடி போல இருக்கும் வியாபார ரீதியாக பயிர் செய்யப்படுகிறது கிழங்கு முற்றிய நிலையில் சிறு சிறு துண்டுகளாகி நறுக்கி அரைத்து மாவாக்கி துணியில் முடிந்து நீரில் மூழ்க செய்து துணியை கசக்கி அதில் உள்ள மாவை கரைக்க கீழ் உள்ள பாத்திரத்தில் மாவு இறங்கும் இதனை கலக்கி தெளிவை நீக்கி கீழே படிந்திருக்கும் மாவை உலர்த்தி மீண்டும் பிடித்து சலித்தது தான் ஆரொட்டிமாவு எனப்படும் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய கழிச்சலை நிறுத்தக்கூடியது இந்த மாவில் எளிதில் செரிக்க கூடிய நுண்ணிய ஸ்டார்ச் துகள்களும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கும் இதை கொடுக்கலாம் 20 கிராம் மாவுடன் அரை லிட்டர் நீரில் சேர்த்து காய்ச்சி கஞ்சி பதம் வந்தவுடன் இறக்கி கழிச்சல் வயிற்று உபாதை உள்ளவர்கள் இந்த கஞ்சியை கொடுத்தால் கழிச்சல் வயிற்று உபாதைகள் தீரும் நன்றி.

No comments:
Post a Comment