முளைக்கீரையை சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் குடல் புண்கள் குணமாகும்.
வெங்காயத் தாள், துத்தி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, சிறிது மஞ்சள் தூள் சேர்த்துச் சாப்பிட்டால் குடல்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
வெந்தயக் கீரையுடன் சிறிது உளுந்தைத் தட்டிப்போட்டு கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.
உலர்ந்த பிரண்டை இலையை (100 கிராம்), சுக்கு (10 கிராம்), மிளகு (10 கிராம்) ஆகியவற்றுடன் சேர்த்துப் பொடியாக்கி, தினமும் காலையில் 2 கிராம் அளவில் சாப்பிட்டால் குடல் புண், தொண்டைப் புண், ஆசனப் புண் போன்ற அனைத்தும் குணமாகும்.
அம்மான் பச்சரிசி கீரையுடன் சிறிது மஞ்சள், ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்
நச்சுக்கொட்டைக் கீரையை அரிந்து, பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் குடல்புண்கள் ஆறும்.
முள்ளிக்கீரையைச் சுத்தம் செய்து பருப்பு சேர்த்துச் சாப்பிட்டால் குடல்புண்கள் குணமாகும்.
பரட்டைக் கீரையைப் பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் குடல் புண்கள் குணமாகும்.
No comments:
Post a Comment